BREAKING NEWS

முஸ்லிம் தலைவர்கள் பேசாமலிருந்தாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்


சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடு என்பதைவிட, சிங்கள பௌத்தத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பதே பொருத்தமானது. இதற்கு தீர்வு என்னவென்றால் மதவாதிகளாகவும், கொள்கையை பரப்பி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும், முஸ்லிம் தலைவர்கள் பேசாமலிருந்தாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் இவ்வாறு பொதுபல அமைப்பின் பொது செயலாளர் கலபட ஹத்தே ஞானசேர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 ஞாயிறு பத்திரிகையொன்று சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உங்கள் தீர்வு என்ன..? என்று கேட்டபோதே அவர் இவ்வாறு விளக்கம் வழங்கியுள்ளார்.  

மேலும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொள்கையை கடைபடியுங்கள். பொது மக்களையும் முஸ்லிம்களையும் குழப்பும் மதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டாமெனவும் பொதுபல அமைப்பின் பொது செயலாளர் கலபட ஹத்தே ஞானசேர தேரர் குறிப்பிட்டுள்ளார்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar