BREAKING NEWS

குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்..! - மூதூரில் சம்பவம்!

மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம்  இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது

மூதூர் தள வைத்தியசாலையில் தமது அலுவலகத்தில் இரவு உணவை உட்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அங்கு மதுபோதையில் வந்த ஒருவர், பொலிஸ் அதிகாரிகளை நோக்கி திடீரென பாய்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஒரு அதிகாரி மயங்கி கிழே விழுந்ததும் தாக்குதலை நடத்திய குறித்த நபர் ஓடுவதற்கு முனைந்த போது ஏனைய இரு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதலை நடத்திய குறித்த நபர் இதற்கு முன்பும் இவ்வாறு பொலிஸாரை தாக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
இத்தாக்குதல் சம்பவம் பற்றி மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar