BREAKING NEWS

மேலான சகோதரர்களே, பெரியோர்களே!


ஜும்ஆ நாளில் மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் கதீப்மார் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை நினைவில் நிறத்தி பிரசங்கம் செய்ய வேண்டும் என அகில இலங்கை கதீப்மார்கள் சம்மேளன பொதுச்செயலாளர் மௌலவி ய+சுப் நஜ்முதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,


சைக்கினை என்னும் சமிக்ஞை அதாவது (இஷாராக்கள்) மூலம் கைகளை உயர்த்தி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அளவுக்கதிகமாக சத்தமிட்டு பேசுவது கூடாது. எல்லா மஸ்ஜித்களிலும் ஒலிவாங்கி வசதியிருப்பதால் மிதமான குரலோசை போதுமானது.
குறிப்பிட்ட சில சொற்களை, இடம்-பொருள் புரியாமல் வெறும் அலங்காரத்திற்காக- சொற்கோலம் போடுவதற்காக அடிக்கடி பிரஸ்தா பிப்பது விரும்பத்தக்கதல்ல. அது கேட்போருக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். உ-ம் மேலான சகோதரர்களே, பெரியோர்களே!
கேளிக்கை-சிரிப்பு-நகைச் சுவை விடயங்களை தொட்டுப் பேசுவது சிறப்பல்ல. சவால்விடும் விவாதம் புரியும், விம்ர்சனம் செய்யும் தோரணையிலான சொல்லாட்சி தவிர்க்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட சில அமைப்புகள் பற்றியும், அவற்றின் தலைமைத்துவம் பற்றியும் சாடியும், புகழ் சூடியும் பேசுவது, சமூகத்தில்-மஜ்லிஸில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்பதால், அத்தகைய பிரச்சார வார்த்தைகளை தவிர்த்தல் நலம்;.

நாட்டின் தற்போதைய சூழல்-பிற சமய சகோதரர்களின ;சரிவான பார்வை மனநிலை அன்னவர்களின் கடைகளில் ஊழியம் செய்யும் முஸ்லிம்களின் நிலை போன்றவற்றை எடைபோட்டு, குத்பா பிரசங்கம் ஜும்ஆத் தொழுகை என்பன சுமார் 35 நிமிடங்களுக்குள் நிறைவு செய்வது நலம். அரச பரீட்சை காலங்களில் முஸ்லிம் மாணவர்கள் ஜும்ஆத் தொழுகையின் பின்னரே பரீட்சைக்கு பிரசன்னமாகுவதால் இந்நேர சுருக்கும் துணைபுரியும். தொழுகை யின் பர்ளு, ஷர்த்துக்கள் பேணி, தொழுகையில் சூரா பாத்திஹா ஏனைய சூராக்கள் ஓதுதல் என்பன தஜ்வீத்-தர்த்தீப் முறைப்படி அவசர மில்லாமல், நிதானமாக ஓதுவது விரும்பத்தக்கது. (சிலர் பயானை போரடிக்க நீட்டி விட்டு, பர்ளான தொழுகையை எக்பிரஸ் வேகத்தில் முடித்துவிடுவர்)  

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar