BREAKING NEWS

தொலைபேசியில் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு இளம் பெண்கள் சூழ்ந்து தர்ம அடி

இளம் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி தொல்லை கொடுத்த இளைஞனை, அந்தப் பெண் பொலிஸில் சிக்க வைத்துள்ளார்.


முன்னதாக, அந்த இளைஞனை தன் தோழிகளுடன் சேர்ந்து, ரயில் நிலையத்தில், அந்தப் பெண் துவைத்து எடுத்தார்.

மும்பை தாராவியில் கையடக்க தொலைபேசி கடை வைத்திருப்பவன் மிதிலேஷ் திவாரி, 30. தற்செயலாக ஒரு எண்ணுக்கு அழைப்பை எற்படுத்தியபோது, எதிர் முனையில் அழைப்பை எடுத்த இளம்பெண்ணிடம், தவறாக பேசியுள்ளார். அந்தப் பெண், அந்நபரை திட்டி, போனை வைத்து விட்டார். எனினும், விடாமல் தொடர்ந்து, பல முறை, ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளான். அவனின் ஜொள்ளுப் பேச்”, பல நாட்களுக்குத் தொடர்ந்ததால், அந்தப் பெண் வேதனை அடைந்தார்.

அவனை பொலிஸில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்த அப்பெண், தன்னை சந்திக்க வேண்டுமானால், குர்லா ரயில் நிலையத்துக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு கூறினாள். அடையாளம் காண்பதற்காக, தான் அணிந்துள்ள ஆடையின் நிறத்தையும் கூறினார். இதை உண்மை என, நம்பிய ஜொள்ளு வாலிபன் மிதிலேஷ், டிப்-டாப்பாக டிரஸ் செய்து கொண்டு, கல்யாண மாப்பிள்ளை போல, ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த பொலிஸாரிடம், அந்தப் பெண் முன்னதாக கூறி வைத்திருந்ததன் அடிப்படையில், அவர்கள் மறைந்திருந்தனர். மின்னல் வேகத்தில் வந்திறங்கிய மிதிலேஷ், அடுத்த சில நிமிடங்களில், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விட்டான். பெண்ணை நெருங்கி, "வாங்க ஹோட்டலுக்கு போகலாம்´ என அழைத்து, கையை பிடித்து இழுத்தது தான் தாமதம்.

அழகான ராட்சசியாக மாறிய அந்தப் பெண், அவனை துவைத்து எடுத்து விட்டார். அவருடன் வந்திருந்த தோழிகளும், அவனுக்கு, செமவிருந்து கொடுத்தனர். தப்பி ஓட முயன்றவனை, பொலிஸார் கைது செய்தனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar