BREAKING NEWS

கிண்ணியாவில் மலர் எப் எம் இணைய வானொலியின் ஊடகவியல் செயலமர்வு

மலர் எப் எம் இணைய வானொலியின் ஏற்பாட்டில் கிண்ணியா மாணவர்களுக்கான ஊடகவியல் செயலமர்வு எதிர் வரும் 9ந்திகதி ;ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.

கடந்த முறை இவ்வாறான செயலமர்வு மூதூரில் நடைபெற்றதை தொடர்ந்து கிண்ணியாவிலும் நடத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்ததன் காரணமாக இச்செயலமர்வு கிண்ணியாவில் நடைபெறவுள்ளது. மலர் எப் எம் இணைய வானொலியின் பணிப்பாளர் ஷரீக் தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை நடைபெறவிருக்கும் மேற்படி ஊடகவியல் செயலமர்வின் போது மலர் எப் எம் இணைய வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளரும் அல்ஜஸீறா பத்திரிகை ஆசிரியருமான முபாறக் ஏ மஜீத் பிரதம அதிதியாகவும், முன்னாள் மூதூர் பிரதேச சபை தவிசாளர் தௌபீக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
    இச்செயலமர்வின் பிரதம வளவாளராக சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ. றிம்ஷாட் கலந்து கொள்ளவுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar