BREAKING NEWS

கல்முனை மாநகரை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்களோ, அரசியலோ தெரியாது


கல்முனை மாநகர மேயரால் சாய்ந்தமருதில் கட்டப்பட்ட ப+ங்கா மற்றும் வாசிகசாலையின் சுற்றுமதில்கள் சட்டத்துக்கு முரணானவை என்பதால் அவற்றை உடைக்க வேண்டும்
என்ற கரையோர பாதுகாப்புச்சபையின் கூற்று கல்முனை மாநகரை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்களோ, அரசியலோ தெரியாது என்பதையும் கல்முனை மாநகர சபை பாரிய ஊழலில் சிக்கியுள்ளது என்ற எமது குற்றச்சாட்டையும் நிரூபித்துள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கல்முனை மேயரினால் அண்மையில் சுமார் ஒரு கோடிக்கும் மேல் செலவு செய்து கட்டப்பட்ட கட்டட சுற்று மதில்களை உடைக்க வேண்டும் என கரையோர பாதுகாப்பு படையினரால் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம்; பொதுமக்களின் பல லட்சக்கணக்கான பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் போது அதற்குரிய சட்ட திட்டங்கள் என்ன என்பது தெரியாமல் இவை பற்றி சரியாக அறிந்தோரிடம் ஆராயாமல் கோடிக்கனக்கான பணத்தை செலவு செய்து விட்டு பின்னர் அவற்றை உடைக்கும் நிலைக்கு தள்ளுவது என்பது சட்டங்கள் பற்றிய அறியாமையினாலா அல்லது உடைக்கப்பட்டால் தாம் கொள்ளையடிப்பவற்றையும் உடைக்கப்பட்ட கணக்கினுள் முடக்குவதற்கா என்ற கேள்வி; எழுகிறது.

சாய்ந்தமருதில் ப+ங்கா அமைவதை விரும்பாத கல்;முனைக்குடியினர் சிலரே இது பற்றி முறையிட்டுள்ளதாக மேயர் தரப்பில் வெளியான பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவர்கள் இன்னமும் குழந்தைத்தனமான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அத்துடன் ஒரு தாய் மக்களாக வாழும் சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களை சுயநல வெறி பிடித்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் பிரதேச வாதத்துள் புகுத்தி வருவது கவலை தருகிறது. முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோசத்துடன் வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையின் இந்த இருபது வருட வரலாற்றில் செய்த மிகப்பெரிய சாதனை அப்பாவி கல்முனைக்குடி சாய்ந்தமருது மக்கள் மத்தியில் பிரதேச வாதத்தை வளர்த்தது மட்டும்தான். சய்ந்தமருது மக்களை உசுப்பேற்றி சாய்ந்தமருதூராருக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கல்முனைக்குடி மக்களை உசுப்பேற்றி கல்முனைக்குடியாருக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் மிக மோசமான பிரதேச வாதத்தை கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் தமது சுய நல அரசியலுக்காக விதைத்து விட்டதன் காரணமாகவே இவ்வாறான சின்னத்தனமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆகவே சாய்ந்தமருது பீச் பார்க் சுற்று மதில்கள் உடைக்கப்படுமானால் தனது மடத்தனத்தின் காரணமாகவே மக்களின் சொத்துக்கள் இவ்வாறு வீணடிக்கப்படுகின்றன என்பதை கல்முனை மேயர் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் தமக்கும்; தமது கட்சிக்கும் கல்முனையை ஆள தகுதி உள்ளதா என்பதை மனச்சாட்சியுடன் பரிசீலனை செய்ய வேண்டும். அதே போல் கல்முனையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரசிடமிருந்து மாற்றினால் இன்னும் பல கடந்த கால பாரிய ஊழல்களை வெளிக்கொணர முடியும் என்பதை பொது மக்களும் உணர்ந்து அதற்கான செயற்பாட்டில் இறங்குவது கல்முனையை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என்பதை முஸ்லிம் மக்கள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar