BREAKING NEWS

ஜமீல் முதலில் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை முதலில பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா

கிறேன்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை கண்டிக்குமுகமாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் முதலில் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை முதலில பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா
என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது

நோன்பு ஆரம்பித்த அன்றே கிறேன்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்டது. ஆனாலும் புத்தகயாவுக்கு துக்கம் தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்களும் உலமா சபையும் கிறேன்பாஸ் பள்ளி விடயத்தில் தூக்கத்தில் உள்ளனர் என நாம் சுட்டிக்காட்டினோம். இன்று அவர்களின் தூக்கம் காரணமாக முஸ்லிம் சமூகம் பாரிய இன்னலை சந்திக்கின்றது.

எம்மைப்பொறுத்தவரை இத்தகைய தாக்குதல்களுக்கு வெறுமனே அமைச்சர்களை மட்டும் குற்றம் சாபட்டுவதில் அர்த்தமில்லை. மாறாக இத்தகைய போலிகளுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் ஏமாளி மக்கள் கூட்டமும் பொறுப்பாகும்.

புல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட பின்னரும் அமைச்சர் அதாவுள்ளா சம்மாந்துறை வந்த போது அவருக்கு அம்மக்கள் மாலை போட்டு வரவேற்றனர். அதே போல் ஹக்கீம் கூட்டம் சாய்ந்தமருதுக்கும், கல்முனைக்குடிக்கும் வந்த போது அங்கும் மக்கள் இவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுவதை விடுத்து மாலையிட்டு வரவேற்றனர். இத்தகைய மக்கள்pன் செயல்கள் மூலம் நீ;ஙகள் எவ்வளவுதான் பேசாமல் இருந்தாலும் நாம் உங்களுக்கு மாலையிடுவோம் என்ற செய்திகளைத்தான் கூறின.

அதே போன்று இத்தனை அநியாயங்கள் நடந்தும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு முட்டுக்கொடுக்கின்றது. அதுவும் ஜமீலின் தலைமையிலேயே முட்டுக்கொடுக்கிறார்கள். இந்த நிலையில் அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி இவர் கோருவது எங்கே பள்ளிவாயல் சம்பந்தமாக மக்கள் உண்மையை உணர்ந்து தமது பக்கம் அவர்களது ஆத்திரம் திரும்பி விடுமோ என்ற அச்சத்தினாலேயே இவ்வாறான ஏமாற்று அறிக்கையை விட்டுள்ளார்.
ஏனைய அமைச்சர்களை இது விடயத்தில் ராஜினாமா செய்யும் படி கூறுவதை விட இன்னமும் வெட்கமின்றி அமைச்சரவையில் இருக்கும் தமது தலைவருக்கும் தவிசாளருக்கும் எதிராக ஏன் ஓர் எழுத்தைத்தானும் இவரால் எழுத முடியவில்லை? இது இவரின் சுயநலத்தையே காட்டுகிறது.
ஆகவே இத்தகையவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றாமல் தாம் அரசுக்கான ஆதரவிலிருந்த இதோ விலகி விட்டேன் என ஒரு அறிக்கையை ஜமீலால் விட முடியுமா என கேட்கின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar