BREAKING NEWS

வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சி என்பது த. தே. கூட்டமைப்பு இன்னமும் முஸ்லிம்களை புரிந்து கொள்வில்லை என்பதையே காட்டுகிறது


வடமாகாண தேர்தல் முடிந்ததும் வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சி முன்;னெடுக்கப்படும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்துவததாகும்


அண்மைக்காலமாக சிங்கள இனவாதத்தினால் பாரிய பல அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்து வருகையில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பரஸ்பரம் பரிந்துணர்வுடன் செயலாற்ற முன் வர வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்பட்டு வரும் வேளையில் வட மாகாண தேர்தல் முடிந்ததும் வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சி என்பது த. தே. கூட்டமைப்பு இன்னமும் முஸ்லிம்களை புரிந்து கொள்வில்லை என்பதையே காட்டுகிறது. இதனை சரிவர புரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே இந்த மாகாண சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான இயக்கமும், ஜமாஅதே இஸ்லாமியின் உப பிரிவும் விழுந்தடித்துக்கொண்டு த. தே. கூட்டமைப்புடன் தேர்தல் ஒப்பந்தம் செய்ததை நாம் வரவேற்று பேசவில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பை கைவிட்டு விட்டோம் என தமிழ் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்காத வரை அவர்களுடன் முஸ்லிம்கள் இரண்டற கலப்பதை நாம் எற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களின் கட்சிகள் தனித்துவமாக போட்டியிட்டு தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்ய முடியுமே தவிர தமிழ் கூட்டமைப்பின் சின்னத்தில் முஸ்லிம் கட்சிகள் போட்டியிடும் சூழலோ, கள நிலைவரங்களோ இன்னமும் ஏற்படவில்லை என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது.

இந்த நிலையில் புதிதாக முஸ்லிம் சமூகத்துள் அறிமுகமாகிய நல்லாட்சிக்கான இயக்கம் போன்றவற்றின் முடிவு என்பது ஏதோ சில அற்ப அரசியல் இலாபத்துக்காக எடுக்கப்பட்ட அவசர முடிவாகவே தெரிகிறது. இத்தகைய அடிமைத்தனமான சரணடைதலின் வெளிப்பாடே சுதந்திரன் எம் பியின் மேற்படி கருத்தாகும்.
வடக்கு கிழக்கு இணைப்பை பொறுத்த வரை எமது கட்சி இதனை முற்றாக மறுக்கிறது. அவ்வாறு இணைக்கப்பட வேண்டுமாயின் அதற்கு முன்பாகவே கிழக்கில் முஸ்லிம்களின் கையிலுள்ள அனைத்து பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கென தனியான மாகாண நிர்வாக சபையும், அதே போல் வடக்கு முஸ்லிம்களின் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து அவர்களுக்கும் தனியான மாகாண நிர்வாக சபையும் வழங்கப்பட வேண்டும். இதனை தமிழ் தரப்பே முன்மொழிய வேண்டும் என்பதை எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே பகிரங்கமாக நாம் கூறி வருவதோடு இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறோம். அவ்வாறு செய்யாமல் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களை மீண்டும் அடிமைச்சமூகமாகவே வாழ வழி வகுக்கும்.

ஆகவே தமிழ் கூட்டமைப்பினருக்கு தமிழ் முஸ்லிம் உறவில் அக்கறையிருந்தால் எமது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து விட்டுக்கொடுப்புடனான புரிந்துணர்வுபேச்சு வாhத்தைகளுக்கு முன் வர வேண்டும். அதனை விடுத்து எரிகிற நெருப்பில் பிடுங்க முனைவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar