BREAKING NEWS

அஸ்வர் ஹாஜிக்காக பிரார்த்திப்;போம்.- முபாறக் அப்துல் மஜீத்



பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜி சுகமில்லாமல் இருப்பது கவலை தருகின்றது. அவர் மீது அன்பர்கள் சிலர் மிகவும் ஆத்திரமாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
சமூகம் மீதான பற்றுதல் காரணமாக இவ்வாறு அவர்கள் கருத்துதெரிவித்திருக்கலாம். ஆனாலும் எந்த விடயத்தையும் நாம் நடுநிலைமைச் சிந்தனையுடன் நாம் நோக்க வேண்டும்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்கள் காரணமாக அஸ்வர் மீது பலருக்கும் ஆத்திரம் உண்டு, எனக்கும்தான். ஆனாலும் சில விடயங்களை சிந்திக்கும் போது அவருக்காக நாம் துஆச்செய்துதான் ஆக வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றில் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெல்லாமல் தொடர்ந்து பலமுறை பாராளமன்ற உறுப்பினராக இருக்கும் சாதனை அஸ்வருக்கு மட்டுமே உண்டு. இதனை இனி எவராலும் முறியடிக்கவும் முடியாது. அதே போல் தனக்கு யார் வாழ்வளித்தாரோ அவருக்கு நூறு வீதம் விசுவாசமாக அவர் இருப்பார். பிரேமதாசாவுடன் அப்படித்தான் இருந்தார். இப்போது மஹிந்தவுடன் அப்படித்தான் இருக்கிறார். நான் ஒரு நாள் அவரிடம் கேட்டேன் ஜனாதிபதியை மிக அதிகமாக தூற்றிய நீங்கள் மிக அதிகமாகவே ஜனாதிபதிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே ஏன்? அவர் கூறினார் எனக்கு சம்பளம், வாகனம், பெட்றோல் எல்லாம் அவர் தருகிறார். அதனால் விசுவாசமாக இருக்கிறேன் என்றார்.
அவரின் அந்தக்கூற்று சாயா பிழையா என்பதற்கப்பால் தமக்கு வாகனம், பெட்றோல், சம்பளம், கிம்பளம் என வாழ்வதற்கு உதவி செய்த மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல் அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விட அஸ்வர் மேல் என்றுதான் எனக்கு தோன்றகிறது. அவர் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்களை மறந்தவரல்ல.
அதே போல் சமூகத்துக்காக பெரிதாக எதையும் சாதிக்காத ஹக்கீம், அதாவுள்ளா, ஹரீஸ், பைசல் காசிம் என இவர்களைக்கண்டதும் காலில் விழாக்குறையாக பல் இளிக்கும் பொது மக்களை காணும் போது அஸ்வர் தனக்கு வாழ்வளித்தவருக்கு விசுவாசமாக இருப்பதை குறை காண முடியாது.
இன்னொரு விடயத்தை இங்கு நாம் புரிய வேண்டும். அதாவது அவர் அமைச்சராக இருந்தவர், நீண்ட காலமாக பாராளுமன்ற உறப்பினராக இருப்பவர். ஆனால் கள்ளத்தனமாக சொத்து சேர்க்கவில்லை. அப்படி சேர்த்து இருந்தால் ரணில் அவருக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்காத 6 வருடங்கள் பாரிய கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார். இந்த வகையில் அஸ்வர் ஜென்டில் மேன் அரசியல்வாதி.
தனிப்பட்ட வகையில் எனக்கு சில விடயங்களில் அவரை பிடிக்கும், சில விடயங்களில் பிடிக்காது. சராசரி கொழும்புத்தலைமைக்கு இருக்கும் கிழக்கு மாகாணத்தவன் என்பதற்காக ஒருவனை ஓரங்கட்டும் குணம் அவரிடமும் உண்டு. இதன் காரணமாக எனது வெற்றிகள் சிலதுக்கு தடையாக இருந்தார். அவருக்கு முன்னரே நான் ஜனாதிபதியின் அருகில் சென்று இருந்தது அவருக்கு கிலேசத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அதனால் நான் அவரை மிகைத்து விடுவேன் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. நான் ஜனாதிபதியிடமிருந்து பிரிந்த பின் மனுசர் நிம்மதி மூச்சு விட்டிருப்பார். அதற்காக நான் அவரின் சுகத்துக்காக பிரார்த்திக்காமல் இருக்க முடியாது.
பாராளுமன்றத்தில் இஸ்லாம் பற்றி பேசும் போது உடனடியாக என்னை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான அறபு வார்த்தை மற்றும்; குர்ஆன் வசனங்களை கேட்பார். பின்னர் அவற்றை மேற்கோள் காட்டி பேசுவார். இது அவரது நல்ல குனம். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுள் இஸ்லாம் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய அதிக அறிவுள்ளவர் அஸ்வர் மட்டும்தான்.
ஆக, நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும். நம் எவருமே அவருக்கு ஓட்டுப் போட்டு அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. அதனால் ஓட்டுப்போட்டு நீங்கள் அனுப்பிய உதவாக்கரை பாராளுமன்ற உறுப்பினர்களை கடிந்து கொள்ளாமல் அஸ்வரை கடிப்பது சரியானதாக தெரியவில்லை.
இன்னொன்றையும் இங்கு தெரிவிக்கலாம். அதாவது அரசியல்வாதிகள் இலேசில் மண்டையை போடமாட்டார்கள். அதற்கு உதாரணமாக அலவி, பௌசி, அஸ்வர், மன்சூர் ஜயரட்ன, என 70 வயதுக்கு மேல் நிறையப்பேர் உண்டு. இதில் விசேசம் என்ன தெரியுமா? அவர்கள் கண்ணாடி கூட அணிவதில்லை.
எது எப்படியோ நமக்கு தெரிந்த முஸ்லிம் என்ற வகையில் அவரின் சுகத்துக்கும், சமூக உணர்வுக்கும் பிரார்த்திப்போம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar