BREAKING NEWS

யாழ் சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை

தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு  யாழ் சிறைச்சாலையில்  இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ்.இந்திரன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் ஜனாதிபதியின்  பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.



இதில்  சிறிய குற்றமங்களில்  ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்களே  விடுதலை செய்யப்பட்டனர்.
அன்று மதியம்  மேற்படி 9 கைதிகளும்  சிறைச்சாலை அதிகாரிகளின் முன்னிலையில் விடுவிக்கப்பட்டனர்.(பாறூக் சிகான்)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar