BREAKING NEWS

பதில்




முஹம்மது வஸீம் ஹ{சைன் என்பவர் பிறை சம்பந்தமான எமது கருத்துக்கு பதில் தந்துள்ளார்.

இந்த தனி நபர் இணையத்தில் விடுத்துள்ள பதிலுக்கு நாம் இங்கு பதில் தருகிறோம். அதில் இவர்  ஹாஜிகள் அறபா நாளன்று நோன்பு பிடிக்கத்தேவையில்லை என்பதற்குரிய ஆதாரத்தை  விளக்கியிருந்தார். இது விடயம் பற்றி எந்த கருத்து வேறுபாடும் எம்மிடம் இல்லை என்பதுடன் நாம் இது பற்றி எழுதவுமில்லை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர் ஹாஜிகள் என்று மக்காவில் கூடுகின்றார்களோ அதே நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல் எந்த ஹதீதிலும் வாசகம் இடம் பெறவில்லை என கூறுவதன் மூலம் இவர் எமது அறிக்கையை சரியாக வாசிக்கவில்லை என்பதும் நாம் சொல்லாத விடயத்தை சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமது வாக்கியம் இதோ: ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் தினமான - அரபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
அதாவது அறபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கட்டளையிட்டிருப்பதாகவே நாம் கூறினோமே தவிர மக்காவில் கூடும் நாளில் என்று கூறவில்லை. அறபா நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடும் நாள் என்பது சகலருக்கும் தெரியும்.
நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த காலத்தில் மக்காவுக்கு ஒருவரை அனுப்பி அங்கு பிறை கண்ட  தகவலை எடுத்து வர சொன்னதாக ஹதீத் இல்லை என்கிறார். இதற்கு ஹதீத் இருப்பதாக நாமும் கூறவில்லை. மதீனாவிலிருந்து ஒருவரை  மக்காவுக்கு அனுப்பி பிறை கண்ட செய்தியை எடுத்து வர குறைந்தது ஆறு நாட்கள் செல்லும். மதீனாவிலிருந்து மக்கா போய்வர சுமார் 800 கிலோ மீட்டர். இன்றைய வாகனத்தில் செய்வதாயின் சென்று வர சுமார் 8 மணி நேரம் எடுக்கும். ஒட்டகத்தில் சென்று வர எத்தனை மணி நேரம் எடுக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
இங்கு ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபியவர்கள் ஒரு விடயத்தை செய்தால், ஏவினால் அது உலகம் அழியும் வரை மார்க்கமாகிவிடும். நபியவர்கள் அவ்வாறு மக்காவுக்கு ஒருவரை அனுப்பி பிறை பார்த்து வரும்படி கூறியிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கமாகியிருக்கும். இந்த நிலையில் ஷாம் தேசத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்களும் தமது நாடுகளிலிருந்து ஒருவரை அனுப்பி மக்கா பிறை பார்ப்பதே மார்க்கமாக சுன்னத்தாக கருதியிருப்பர். இந்த நிலையில் ஷாம் தேசத்திலிருந்து மக்கா சென்று வருவதாயின் இருபது நாட்களுக்கு மேல் செல்லும். இந்தியாவாக இருப்பின் மாதக்கணக்கில் செல்லும். இஸ்லாம் எக்காலத்திற்கும் எல்லா தேசத்திற்குமுரிய மார்க்கம் என்பதனால் இது மக்களுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனாலேயே நபியவர்கள் இவ்வாறு வழி காட்டவில்லை. அதன் காரணமாக பின்னால் தொலை பேசி அறிமுகமாகும் காலத்தில் வாழும் மக்களுக்கும் ஏற்றாற்போல் “அறபா நாளில் நோன்பு பிடியுங்கள்” என அழகிய வசனத்தை பாவித்துள்ளார்கள். அறபா நாள் என்றால் துல்ஹஜ் பிறை 9 என்பதற்கும் அப்பால் ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேரும் நாள் என்பது வலுவானது.
நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த ஏனைய தேசத்து மக்கள் மக்கா பிறையை வைத்து அறபா நாளை எடுக்கவில்லை, மாறாக தமது தேசத்து பிறையை வைத்து இதுதான் அறபா நாளாக இருக்கலாம் என்றே அவற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனை எமது அறிக்கையிலும் சொல்லியுள்ளொம். இதற்கு காரணம் அறபா நாள் எப்போது என்பதை மக்கா பிறையை வைத்து அறியக்கூடிய வசதிகள் அவர்களுக்கிருக்கவில்லை. இங்கு நான் தேசங்கள் என்பது மதினாவையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் மட்டுமல்ல. மாறாக ஷாம், சிந்து, இந்தியா போன்ற தேசங்களையும் உள்ளடக்கியதாகவே சொல்கிறேன்.
இதனை ஆயிஷா (ரழி) யின் பின்வரும் கூற்று தெளிவு படுத்துகிறது. நான் அரஃபா நாளில் ஆயிஷா ரலி) அவர்களிடம் சென்றேன். இருவருக்கும் கோதுமைக் கஞ்சியை கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள். என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று மக்காவில் ஹஜ் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று கூறினேன். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள், நோன்பு பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்பு பெருநாள் “என  விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர். மஸ்ரூக்    நூல் பைஹகீ
இதில் நமக்கு பல தெளிவுகள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட சஹாபி இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதனை சொல்கிறார். இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்ல முடியும். அதாவது ஒருவருக்கு தொழுகைக்கான கிப்லாவின் திசை சரியாக தெரியவில்லை. ஒரு பக்;கமாக திரும்பி இதுதான் கிப்லாவாக இருக்குமோ என சந்தேகிக்கிறார். இவருக்கு நாம் என்ன சொல்வோம். எந்தப்பக்கம் கிப்லா என நீ உறுதியாக நினைக்கிறாயோ அதனை கிப்லாவாக ஆக்கிக்கொள் என்று தான் கூறுவோம். அதுதான் இஸ்லாத்தின் சட்டமுமாகும். அNது நேரம் கிப்லாவின் திசை சரிவர தெரிந்தால் அவருக்கு இந்த பதில் பொருந்தாது. இது போன்றே ஆயிஷா ரழி அவர்கள் இங்கு தெளிவு படுத்துகிறார்கள்.
நவீன காலம் வரை கிப்லாவைக்கூட நாம் ஒரு ஊகத்தினாலான திசையின் படியே எமது பள்ளிகளை கட்டி வந்துள்ளோம். அண்மைக்காலத்தில் கிப்லாவின் சரியான திசை காட்டிகள் வந்த பின் பல பள்ளிவாயல்களின் திசைகள் மாற்றப்பட்டுள்ளதை காண்கிறோம். இவ்வாறு நாம் ஏன் பிறை விடயத்தில் மட்டும் எம்மை திருத்திக்கொள்ள மறுக்கிறோம்?

அத்துடன் முஸ்லிம்கள் தீர்மானிப்பதுதான் ஹஜ் என ஆயிசா (அந்த உத்தமியை இறைவன் பொருந்திக்கொள்வானாக) எவ்வளவு அழகாக சொன்னார்கள். மதீனத்து முஸ்லிம்கள் என அவர்கள் வரையறுக்கவில்லை. மக்கா முஸ்லிம்கள் ஹஜ் பிறையை தீர்மானித்ததை ஏன் நாம் ‘முஸ்லிம்கள் தீர்மானித்த ஹஜ் பெருநாளாக’ ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?  ஆயிசாவின் கருத்தில் பிழை காண்கிறோமா? அல்லது மடமையில் இருக்கிறோமா?
மக்கா முஸ்லிம்கள் தமது நாட்டில் நடக்கும் ஹஜ்ஜுக்காக ஹஜ் பெருநாளை தீர்மானித்ததை ஏனைய முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டால் முஸ்லிம்களும் தீர்மானித்த ஹஜ் பெருநாளாக ஆகிவிடும் அல்லவா?

ஆக மிக தெளிவாக அறபா நாள் என்பது அறபாவில் ஹாஜிகள் கூடும் தினம் என்பதும் அந்த நாள் நமக்கு சரிவர தெரிந்தால் அந்த நாளிலேயே நோன்பு பிடிக்க வேண்டும் என்பதையும், மக்காவில் அறபா எப்போது என தெரியாவிட்டால் மட்டுமே நமது நாட்டு பிறையை வைத்து அறபா நோன்பை பிடிக்கலாம் என்பதையும் மிகத்தெளிவாக விளங்குகிறோம். இந்தக்காலத்தில் அறபா நாள் எப்போது என ஒருவருக்கு அறியக்கிடைக்கவில்லை என்றால் அவருக்கு அறபாவின் நோன்பு கூட கடமையாகாது. ஏனென்றால் அவர் புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார்.
முஹம்மது வசீம் ஹ{சைன் அவர்கள் நபியவர்களின் வார்த்தையை அப்படியே பின் பற்றினால் பிரச்சினையே வராது என கூறி விட்டு அமெரிக்காவையும், தொழுகை நேரங்களையும் ஆதாரமாக காட்டுகிறார். இவை அனைத்தையும் விட அறபா நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்ற முஹம்மது (ஸல்) அவர்களின் வார்த்தை ஈமான் உள்ள முஸ்லிமுக்கு போதுமானதாகும்.
இலங்கையை சேர்ந்தவர் மக்காவுக்கு போனால் இலங்கை நேரத்தை வைத்தா அங்கு தொழ முடியும் என கேட்கிறார். தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட ஒன்று. அறபா என்பது நாள் குறிப்பிடப்பட்ட ஒன்று என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை.

இவர் காட்டும் அமெரிக்க நாள் கணக்கு, தொழுகை நேரம் என்பதெல்லாம் எமது கருத்துக்குத்தான் சாதகமாக உள்ளன. அவற்றை நாம் நபியின் ஹதீதை விட உயர்த்த விரும்பவில்லை. எனினும் இவருக்கு புரிய வைப்பதற்காக சொல்கிறோம். இவர் கூறுகிறார்@ அரபாவில் சுபஹ{க்குப்பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மஃரிப் நேரமாகும். மஃரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப்பின் வரும் சுபஹ் நேரத்திலிருந்துதான் அவர்கள் நோன்பை பிடிக்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். … ஆக பெருநாள் தினத்தில் ராமான் நோன்பு நோற்க சொல்லப் போகிறீர்களா? என்று கேட்கிறார். இவருக்கு ஹதீதின் பொருள்தான் விளங்காவிட்டாலும் உலக அறிவும் இல்லை என்பது வெளிச்சமாகிறது.
இவர் நினைத்துக்கொண்டிருக்கிறார், ஹாஜிகள் அரபாவில் தங்குகின்ற போதுதான் ஏனைய முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என நபியவர்கள் கூறியதாக. அவ்வாறு சொல்லப்படவில்லை. மாறாக அறபா நாளில் - யவ்ம அரபா- என மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். நாள் என்பது பகல் மட்டுமல்ல 24 மணி நேரம் கொண்டதாகும். அத்துடன் நமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்குமிடையில்தான் சுமார் 11 மணி நேர வித்தியாசம். மக்காவுக்கும் நமக்கும் சுமார் மூன்றரை மணி நேர வித்தியாசம். மக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் சுமார் எட்டு மணி நேர வித்தியாசம். இப்போது இவர் சொல்லியுள்ளது போன்று பார்ப்போம்.
ஹாஜிகள் மினாவிலிருந்து காலை எட்டு மணியளவில் புறப்பட்டு 12 மணிக்கு முன்னதாக அறபாவை அடைவர். அந்த 12 மணிக்கு அமெரிக்காவில் அதிகாலை 4 மணி. இந்த நேரத்தில் அமெரிக்க மக்கள் நோன்பு வைக்க முடியாதா? இவர் சொல்கின்றபடி 12 மணி நேர வித்தியாசப்படி பார்த்தால் கூட மக்காவில் சுபஹ் என்றால் அமெரிக்காவில் மஃரிப் என்றால் 12 மணி நேர வித்தியாசம். அவ்வாறாயின் நோன்பு பிடிப்பது காலை 6 மணிக்கு அல்ல. சஹருடைய நேரம் சுபஹ{க்கு முன்னதாகும். சுமாராக அதிகாலை 4 மணி என கொள்ளலாம். அமெரிக்காவில் அதிகாலை 4 மணி என்றால் அறபாவில் 12 மணி நேரம் கழித்து பார்த்தால் அறபாவில் மாலை 4 மணியாகும். அந்த வேளை அரபாவில் ஹாஜிகளின் பிரார்த்தனைகள் சூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அமெரிக்க முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்கிறார்கள் என்றால்… சுப்ஹானள்ளா. எத்தனை அருமை. இறைவன் எத்தனை அருமையான பாக்கியத்தை உலகளாவிய முஸ்லிம்களுக்கு தந்துள்ளான். சஹருடைய நேர பிரார்த்தனையும் அரபா ஹாஜிகளுடைய பிரார்த்தனையும் ஒரே நேரத்தில் வானை பிளக்குமல்லவா!
மக்கா என்பது முழு உலகின் மத்தியில் இறைவன் வைத்துள்ளான். இதன் காரணமாக மக்கா பிறை முழு உலகுக்கும் அந்த நாளின் ஒரு பகுதியையாவது கொடுக்கும். கணக்கில் எடுக்க முடியாத சூரியன் உதிக்காத நாட்டைத்தவிர. இவ்வாறு மக்காவை உலக மத்தியில் வைத்த அந்த வல்ல நாயன் மகத்துவமிக்கவன், பேரறிவாளன். ஒரு காலத்தில் மக்காவின் பிறையை முழு உலகும் ஒரே நாளில் அறிந்து கொள்ளும் வாய்பப்பு வரும் என்பதை  அவன் தெரியாதவனா? அதனால்த்தான் மக்காவை மத்தியில் வைத்து ஹாஜிகள் அறபாவில் கூடும் ஒரே நாளில் முழு உலக முஸ்லிம்களும் நோன்பு பிடிக்க வைத்துள்ளான். அதனை உணராதவார்கள் நிச்சயம் இன்னும் சில வருடங்களில் உணர்வார்கள்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர், அகில இலங்கை உலமா கவுன்சில்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar