ஐக்கிய
தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான
சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே பேச்சு
வார்த்தை ஒன்று இடம்பெற்றது.
வெற்றியை நோக்கி ஐக்கிய தேசிய கட்சியினை இட்டுச் செல்லும் நோக்கிலேயே
இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.