BREAKING NEWS

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஜனாதிபதி ஆதரவுடன் தரமுயரும்

கல்முனை தமிழ் பிரதேச செயலகம்; தரமுயர்த்தப்பட வேண்டியது தேவையான ஒன்று என்றும் ஜனாதிபதி ஆதரவுடன் இது தரமுயர்த்தபடுமென பெது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரத்ன தமிழ் மக்கள் தரப்பிடம் வாக்குறுதியளித்துள்ளதாக
அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றிய தலைவர் எஸ். சசிகுமார் தெரிவித்தார்.

நாளுமன்ற கட்டடத் தொகுதியில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்து தமிழ மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். என அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய இப்புரதேச செயலகத்தை தரமுயர்த்தி இப்பிரச்சினைளை எப்படியாவது தீர்த்து வைக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எவ்வித அதிகாரமுமற்ற ஒரு பிரதேச செயலாளருடன் முழுமையான கட்டிட வசதிகளுடனும் இப் பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் உடனடியாக தரமுயர்த்தபடுவதே தமிழர்களுக்கு இன்றைய தேவை என்பதை சுட்டிக்காட்டி, 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 23 மிரதேச செயலகங்களில் இப்பிரதேச செயலகம் மட்டுமே தரமுயர்த்தப்படவில்லை. என்றும் தெரிவித்தார் என அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றிய தலைவர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar