இலங்கை முதலீட்டாளர் சபை முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி வர்த்தக வலயத்தில் கடமை புரியும் தொழில் பேட்டை ஊழியர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடலொன்று, கடந்த வியாழக்கிழமை (19.12.2013) அவிசாவளை – சீதாவக்க தொழில்பேட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள முதலீட்டாளர் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,
ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவுக்கும் முதலீட்டு சபையின் நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்குமிடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இங்கு கடைமையாற்றும் ஊழியர்கள் பலர், தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் பிரதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.
இதனையடுத்து, ஊழியர்களின் பிரச்சினைகள் பற்றி உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும், இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாகவும் பிரதியமைச்சர் முஸ்தபா உறுதியளித்தார்
தொலைபேசி ஊடாகவும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக, உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடல்களையும் பிரதியமைச்சர் மேற்கொண்டார்.
முதலீட்டுச் சபை அதிகாரிகளிடம் சில விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், ஊழியர்களின் விடயத்தில் இயன்றளவு கரிசனை காட்டுமாறும் பிரதியமைச்சர் வேண்டிக் கொண்டார்..
பிரதியமைச்சர் முஸ்தபா, இந்த வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஊழியர்களையும் சந்தித்து, அவர்களின் எதிர்கால நடவடிக்கைத் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்தார். வர்த்தக வலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான அத்துல ஜயசிங்ஹ, யூ. சிரிகம்பள, எச்.ஜீ.பி.பீ.வீ.சில்வா மற்றும் முதலீட்டாளர் சபை உறுப்பினரான சன்ன பலன் சூரிய, அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பதிகாரி சில்மி றியாஸ்தீன், ஊடகச் செயலாளர் பி.எம். முர்ஷிதீன், அரசியல் தொடர்பதிகாரிகளான பிரசான் சாமர, உபாலி லியனகே ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
படமும் தகவலும :- ( ஐ. ஏ. காதிர் கான் )