BREAKING NEWS

ராஜபக்ச அரசின் தேவைகளையே பொலிஸார் நிறைவேற்றுகின்றனர்; நாட்டில் ஜனநாயகமே இல்லை என்கிறது அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் -

இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமே இல்லை. ராஜபக்சவின் ஆட்சிக்குத் தேவையான வரையறுக்கப்பட்ட சட்டமே நாட்டில் செயற்படுத்தப்படுகின்றது. பொலிஸார், ராஜபக்ச அரசின் தேவைகளையே நிறைவேற்றி வருகின்றனர்.   இவ்வாறு
அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   நாட்டின் ஜனநாயகமும் சட்டமும் ராஜபக்ச நிர்வாகத்தின் கட்டளையின்படியே செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தமக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் உரிமையுள்ளது.   நாட்டில் ஜனநாயகம் செயற்பாட்டில் உள்ளதென்றால் அநீதிக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.   பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு ஏற்படும் ஏதோ அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்றும், அது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் ராஜபக்ச அரசு கூறுகின்றது.    ஆனால், இந்த அரசுக்கு ஆதரவாகப் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படவில்லை.   இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது குற்றத் தடுப்பு பிரிவினரோ அல்லது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளோ தலையிடுவதில்லை.   ஜனாதிபதியின் மகன் கார்ப்பந்தயம் நடத்த கொழும்பில் வீதிகள் மூடப்பட்டன. பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோது அநுராதபுரத்தில் சனல் - 4 ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.    இவ்வாறான செயற்பாடுகளின்போது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாதா? - என்று கேள்வி எழுப்பியுள்ளார். -

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar