BREAKING NEWS

19 வகையான சுவையூட்டிகள் இலங்கை மக்களுக்கு ஹராம். அரசு அறிவிப்பு


உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய 19 வகையான உணவு சுவையூட்டிகளைத் தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் உணவு, பானங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சுவையூட்டிப் பதார்த்தங்களை இறக்குமதி செய்வது முற்றாகத் தடை செய்யப்படுகிறது.

உணவு சுவை யூட்டிகள் இறக்குமதி செய்யப்படும்போது அவற்றை உற்பத்தி செய்யும் நாட்டு அதிகாரிகளிடமிருந்து அந்த சுவையூட்டி பாதுகாப்பானது, தகுதியானது என உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் எந்தவொரு சுவையூட்டிகளை இறக்குமதி செய்யவோ, சந்தைப் படுத்தவோ, களஞ்சியப்படுத்தவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது விளம்பரப்படுத்துவதோ தடை செய்யப்படுகிறது.
பால் மற்றும் பால் உற்பத்திகள், ஐஸ்கிaம். குளிரூட்டப்பட்ட உணவுப் பதார்த்தங்கள். கொழுப்பு மற்றும் எண்ணெய், மாஜரீன், பழங்கள், காய்கறிகள் காளான் வகைகள், காளான் உற்பத்திகள், பழங்களால் தயாரிக்கப்பட்ட வைன், பழரசத் தூள், காய்கறி வகைகளின் கலவைத் தூள், தானிய வகைகள், மிருகக் கொழுப்பு எண்ணெய், மாவாக்கப்பட்ட தானிய வகைகள், அரிசி உள்ளிட்ட தானிய வகைகள், பாஸ்டா, நூடில்ஸ், கோதுமையுடன் கூடிய உணவு வகைகள், பாலுடன் கூடிய உணவு வகைகள், பேக்கறி உற்பத்திகள், இறைச்சி வகைகள், கோழி இறைச்சி, மீன் வகைகள், வெள்ளைசீனி, பிறவுண் சீனி, குளுக்கோஸ், பாணி மருந்துகள், சீனியால் தயாரிக்கப்படும் உணவு வகைகள், தேன், தென்னம் பாணி, கித்துல் பாணி, இனிப்பு வகைகள், சூப் பக்கற்றுக்கள், கறித் தூள்கள், மிளகாய்த் தூள்கள், தேயிலை வகைகள், கோப்பி, பேக்கிங் பவுடர், கொக்கோவா பட்டர், கொக்கோ தயாரிப்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சுவையூட்டிகள் கலப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட சுவையூட்டிகளை எவராவது பயன்படுத்தியிருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எலோயின், பர்பரின், பீடா - எசரோன் மற்றும் சினமயில் எந்திரக்சிலேட், கேட் ஒயில், கெலமசி ஒயில், கோகேன், கூமரின், எஸ்ரகோல், இயூஜிநைல் மீதைல் ஈதர், கைபரசீன், நைட்ரோ பென்சின், பைரோ லிஜீன் அசிட், சப்ரோல் மற்றும் ஐசோ சப்ரோல், சசாபிரஸ் ஒயில், தூஜோன், ஐசோ தூஜேன், டொன்கா பீன் உள்ளிட்ட 19 சுவையூட்டிகள் தடை செய்யப்படவுள்ளன.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar