BREAKING NEWS

2014 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது

2014 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது வழங்கப்படும் வைபவ நிமித்தம் கடந்த 2013 ஆம் ஆண்டிற்குள் பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்யும்போது அதனை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்கில் எழுத்தாளர்களுக்கும்
பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களை நேரடியாக ஒப்படைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட 48 பக்கங்களுக்கு குறையாத நூல்களில் ஒரு நூலின் ( 03 ) பிரதிகள் வீதம் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன.
இந்நூல்களை “ செயலாளர் அரச இலக்கிய குழு கலாசார அலுவல்கள் திணைக்களம் 8 ஆம் மாடி செத்சிறிபாய பத்தரமுல்ல “ என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்க முடியும்.
நூல்கள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அரச விருது வழங்கலுக்காக நூல்கள் மதீப்பீடு செய்வதற்கு கீழ் காணும் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
• சுய நாவல்
• சுய சிறுகதை
• சுய கவிதைப் படைப்பு
• சுய இளையோர் இலக்கிய படைப்பு
• சுய பாடலாக்கத் தொகுப்பு
• சுய நாடகம்
• சுய அறிவியல் புனைகதை
• சிறுவர் இலக்கிய படைப்பு (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
• சுய புலமைத்துவ் மற்றும் ஆய்வுசார் படைப்பு
• மொழிபெயர்ப்பு நாவல்
• மொழிபெயர்ப்பு சிறு கதைத் தொகுப்பு
• மொழிபெயர்ப்பு கவிதைப் படைப்பு
• மொழிபெயர்ப்பு நாடகம்
• மொழிபெயர்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு
• நானாவித விடய நூல்கள்
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 011-2872030 அல்லது 011-2872031 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar