BREAKING NEWS

பக்தாத் அறிஞருக்கு நிசாம் காரியப்பர் வரவேற்பு



Aslam Moulana (14)
கல்முனைக்கு விஜயம் செய்துள்ள பக்தாத் நகர இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அஸ்செய்யித் மன்சூருத்தீன் அல்ஜைலாணி அல்பக்தாதி அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெறுகின்ற மீலாதுன் நபி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு வருகை தந்துள்ள இந்த அறிஞர் மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் அழைப்பையேற்று இன்று மாலை மாநகர சபைக்கு விஜயம் செய்தார்கள்.

இதன்போதே அஸ்செய்யித் மன்சூருத்தீன் அல்ஜைலாணி அல்பக்தாதி அவர்கள் முதல்வர் தலைமையில் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் எம்.ஹக்கீம், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Aslam Moulana (2)Aslam Moulana (3)Aslam Moulana (7)Aslam Moulana (9)Aslam Moulana (10)Aslam Moulana (15)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar