Metro mirror
பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும், இஸ்லாமிய ஆய்வாளரும், இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விமானுமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2014.01.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியருமான கலாநிதி.எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் பற்றிய விசேட உரையை நிகழ்த்தினார்.
தென்கிழக்கு சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தென்கிழக்கு உலமாக்கள், பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி விரிவுரையாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து சிறப்பித்தனர்.