BREAKING NEWS

இ.தொ.கா.வின் 6ஆம் திகதி வேட்புமனு

மேல் மாகாண சபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா.வின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேல்மாகாணத்தில் 43 பேரும் களுத்துறையில் 25 பேரும் இ.தொ.கா.வின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதோடு இவர்கள் சேவல் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இ.தொ.கா.வைச் சேர்ந்த ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சினத்தில் போட்டியிடவுள்ளதோடு இவர் ஏற்கனவே வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 
 
மேலும் வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் அன்றைய தினம் மாலை மூன்று மணியளவில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொழும்பு, செட்டியார்தெரு பகுதியில் மாபெரும் மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற உள்ளது.
 
இந்நிகழ்வில்  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்,  முன்னாள் பிரதியமைச்சரும் இ.தொ.கா. உப தலைவரும் மேல் மாகாண சபை தேர்தலில் இ.தொ.கா.வில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான பெ. இராதாகிருஷ்ணன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்வர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar