பெண்களின் திருமண வயது. உணமையை மறைக்கும் உஸ்தாத் மன்சூர்
Posted by aljazeeralanka.com on February 17, 2025 in | Comments : 0
அநாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைப்பது பற்றிய குர்ஆனின் பொருளை உஸ்தாத் மன்சூர் பிழையாக சொல்கிறார். திருமண "வயதை" அடைந்து விட்டால் என்று குர்ஆனில் வயது சொல்லப்படவில்லை. "திருமணம் செய்யும் நிலையை அடைந்து விட்டால்" என்றே உள்ளது. இதன் மூலம் பருவம் அடைந்து விட்டால் என்பதே பொருள். பருவம் அடைவது என்பது பெண்ணுக்கு பெண் வித்தியாசப்படும்.
திருமண வயது 18 என வரையறுக்க முடியும் என மன்சூர் கூற முடியும் என்றால் இதை இறைவன் குரானில் ஹாதீதில் நேரடியாக சொல்லியிருக்க முடியும். அப்படி இதுதான் வயது என சொல்லாமைக்கு காரணம் பெண்களின் திருமண வயது என்பது பெண்ணுக்கு பெண் வேறுபடும் என்பதால்தான். அள்ளாஹ்வோ ரசூலோ திருமண வயது 16 அல்லது 18 என நிர்ணயிக்காத போது நிர்ணயிக்கும் இந்த அதிகாரத்தை மன்சூருக்கும், ரவுப் ஹக்கீமுக்கும் யார் கொடுத்தது?
ஏனைய மத பெண்களுக்கு திருமண வயது 18 என இருந்தாலும் 13 வயதில் அவர்கள் காதலிக்கவும் திருமணம் இன்றியே கர்ப்பமாகவும் நாட்டு சட்டத்தில் இடமுண்டு. ஒரு 14 வயது பெண் திருமண பதிவு இன்றி கர்ப்பமுற்று விட்டால் அதற்காக அவள் சிறை செல்வாள் என சட்டம் உள்ளதாக தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு திருமண வயது ஒரு பொருட்டு இல்லை. 14 வயதில் காதலித்து 16 வயதில் பிள்ளை பெற்று 18 வயதில் திருமணத்தை பதிவு செய்யலாம். பிரச்சினையில்லை. அவர்களின் சமயங்களில் கூட பெண்ணின் திருமண வயது குறிப்பிடப்படவில்லை.
ஆனால் முஸ்லிம் சமூகம் இதை ஆத்மீகமாக பார்க்கிறது. ஒரு பெண் திருமணத்துக்கு முன் கர்ப்பமுற்றால் அது பெரும் பாவமாக பார்க்கப்படுகிறது.
அதனால்த்தான் பெண் பருவமடைந்து அவளுக்கு பாலியல் தேவை ஏற்பட்டால் அவள் எந்த வயதிலும் முடிக்கலாம் என வாயலை திறந்து, பிழையான வாயலை மூடியுள்ளது.
இந்தக்காலத்தில் 12 வயதில் ஒன்லைனில் லவ் ஆகி அடுத்த மாதம் ஓடிப்போய் கருவுறும் பெண்கள் பற்றிய செய்திகள் அதிகம். ஆனாலும் இதற்காக அப்பெண்கள் தண்டிக்கப்படுவதில்லை, ஆனால் 18 வயதுக்கு முன் திருமண செய்தால் மட்டும் தண்டனையாம். முட்டாள்தனம்.
ஆனால் முஸ்லிம் பெண் இப்படி செய்தால் அது ஆத்மீக ரீதியில் அவள் குற்றவாளியாகிறாள்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதை மாற்ற வேண்டும் என்று இந்தியாவில் சுமார் 40 வருடங்களுக்கு முன் பேசப்பட்டது. இப்போது ஒரேயடியாக இந்திய மாநில உத்ரகன்டில் முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்து செய்து விட்டார்கள்.
இதே நிலை இலங்கையிலும் ஏற்படும் என்று உலமா கட்சி பல வருடங்களாக தொடர்ந்தும் எச்சரித்து வருகிறது.
ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தமும் வேண்டாம் என முஸ்லிம் சமூகம் உரத்து சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அச்சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, குரங்கு பூனைகளின் ரொட்டியை சாப்பிட்டது போல் முழுவதையும் இல்லாமலாக்கி விடுவார்கள்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
ஐக்கிய காங்கிரஸ்.
அகில இலங்கை உலமா கட்சி
17.2.2025
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment