BREAKING NEWS

இறைச்சி விற்பனை தடை - அரசு பிக்குகளுக்கு சரண்

மிருகங்களுக்கு ஏற்படும் ‘கால்வாய்’ நோய் அல்லது கோமாரி நோய் அநுராத புரம், புத்தளம், திருகோண மலை, அம்பாறை, வவு னியா மற்றும் முல்லை த்தீவு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளை பாதித்திருப்பதனால், இம் மாவட்டங்களில் இருந்து மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கொண்டு வருவதும் அவற்றை இறைச்சிக் கடைகளில் வைத்து விற்பனை செய்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயினால் பசுமாடுகள், எருமை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள் ஆகிய விலங்கினங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதனால், அவற்றை மறு அறிவித்தல் வரையில் உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யு.கே.டி.சில்வாவின் பெயரில் வெளி யிடப்பட்டு ள்ள விசேட அரசா ங்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
இந்த வர்த்தமானி வெளி வந்த திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு இந் தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்கட்டளை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர், தொற்று நோய் பரவி இருக்கும் பிரதேசங்களில் இருந்து வேறு இடங்களுக்கு இந்நோய் பரவுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
நோய் தொற்றத்தக்க விலங்குகளில் செயற்கைமுறை இனவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நோய் தொற்றத்தக்க விலங்குகளை அறுத்தல் மற்றும் நோய் தொற்றத் தக்க விலங்குகளை விலங்கு சந்தைக் கண்காட்சிகளில் மற்றும் போட்டிகளில் பங்குபற்றுவதை தடை செய்தல் போன்ற விதிகள் இதன்மூலம் அமுலாக்கப்பட்டுள்ளன.
இந்நோயினால் இறந்த விலங்குகளை பாதுகாப்பாக புதைத்து விட வேண்டும் என்றும் அவற்றை நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகளில் அழுகிய நிலையில் விட்டுவிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளையில் மட்டக்களப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன வீதித் தடைகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை அல்லது அவற்றின் இறைச்சியை சட்ட விரோதமாக வாகனங்களில் ஏற்றிச் செல்வதை முற்றாக தடைசெய்து அக்குற்றத்தை செய்பவர்களை கைது செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த மூன்று மாத காலத்தில் கால்வாய் அல்லது கோமாரி நோய் புதிதாக மிருகங்களுக்கு பரவவில்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கால்நடை வளர்ப்பும், இறைச்சி விற்பனையும், பால் உற்பத்திக்கு எதிரான இந்த தடை உத்தரவும் அரசாங்கத்தினால் நீக்கப்படும்.
கால்வாய் நோய் கால்நடைகளையே பாதித்திருக்கின்ற போதிலும் பாதிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. இப்பிரதேசத்தில் இருந்து கோழிகளையும் முட்டையையும் விற்பனை செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar