கிழக்கு மாகாண சபையின் இறுதிக் காலப் பகுதிக்கான முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலி நியமிக்கப்படலாமெனத் தெரிய வருகிறது. இந்த விடயத்தில் அரசு தரப்பு அதிக ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரவிக்கின்றன.
இதேவேளை, அமீர் அலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டால் முதலமைச்சர் பொறுப்பை அவருக்கு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லி ம்காங்கிரஸும் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
