BREAKING NEWS

கசினோ சட்டமூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு. உலமா கட்சி கண்டனம்.

கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காததன் மூலம் மனித குலத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இஸ்லாத்துக்கும்  மிகப்பெரும் துரோகம் செய்து விட்டன என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,


மத பாரம்பரியங்களை கொண்ட இந்த நாட்டில் கசினோ சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் மூலம் ழுமு நாடும் சீரழிவை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சீரழிவிற்கு குர்ஆன் ஹதீத் என சொல்லிக்கொண்ட கட்சியும் அக்கட்சியின் மூலம் அரசியல் முகவரி கொண்டவர்களும் துணைபோயுள்ளமை மிகப்பெரும் வரலாற்றுத் துரோகமாகும். இதன் மூலம் பதவிகள் என்றால் சமூகத்தைக்கூட இவர்கள் விற்கத்துணிந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

இத்தகைய கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் பாராளுனமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். அதே போல் மௌனம் சம்;மதத்துக்கு அறிகுறி என்பதற்கேற்ப ஹக்கீம், ரிசாத், அதாவுள்ளா தலைமைகளிலான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்தை எதிர்க்காமல் நைசாக நழுவிக்கொண்டதன் மூலம் இச்சட்ட மூலம் நிறைவேறுவதற்கு அப்பட்டமாக துணை போயுள்ளமையை எமது கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது. இவர்களின் இந்தச்செயல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாரிய தலைகுணிவுக்குள் தள்ளியள்ளது.

தங்களது அமைச்சுப்பதவிகளையும் மற்றும் பல பதவிகளையும்  காத்துக்கொள் வதற்காக இஸ்லாத்தோடும் மனிதப்பண்புகளோடும் முரண்படும் இத்தகையதொரு சட்டமூலம் நிறைவேற இந்த முஸ்லிம் கட்சிகள் துணை போனதற்காக இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்த முஸ்லிம்களும் இறைவனிடத்தில் குற்றவாளியாக நிற்கிறார்கள் என்பதை எந்தவொரு இஸ்லாமிய அறிவுள்ளவனும் மறுக்க முடியாது.

மணமுடிக்காத ஒரு பெண்ணிடம் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் பற்றிக்கேட்கையில் அவள் மௌனமாக இருந்தால் அதுவே அவளது சம்மதமாகும் என முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கிணங்க இந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மூலத்தை எதிர்க்காமல் இருப்பதற்காக சபை அமர்வை தவிர்த்தமை மூலம் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும்.

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்த இத்தகைய துரோகிகளுக்கு இன்னமும் முஸ்லிம்கள் ஆதரவளித்து தொடர்ந்தும் பாவத்தை சுமப்பதா என்று சிந்திக்க வேண்டும். இவர்களுக்கெதிராக முஸ்லிம்கள் ஜனநாயகரீதியில் தமது எதிர்ப்பை காட்டாதவரை இலங்கை முஸ்லிம்கள் மேலும் மேலும் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளையே சந்திக்க நேரும் என எச்சரிக்கிறோம். இறைவன் தந்த வாக்குரிமையை இவ்வாறான ஏமாற்றுக்கட்ச்pகளுக்கு வாக்களித்து ஏமாற  வேண்டாம் என கடந்த பொதுத்தேர்தல்களில் நாம் முஸ்லிம் சமூகத்துக்கு பகிரங்கமாகவே கூறியுள்ளோம். ஆனாலும் ஏமாறுவது மட்டுமே தமது  நிரந்தரமான தலைவிதியாகக்கொண்டதே இலங்கை  முஸ்லிம் சமூகம் என்பதுதான் மிகவும் கவலைக்குரியதாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar