BREAKING NEWS

சர்ச்சைக்குரிய வில்பத்து பிரதேசத்தில் குடியேறிய குடும்பங்களுக்கு மாற்று காணிகள்


பூங்காவிற்கு வெளியே 50 ஏக்கர் காணித் துண்டுகளை பகிர்ந்தளிக்க முடிவு

வில்பத்து தேசிய பூங்காவுக்குட்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் குடியேறியுள்ள 73 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காக பூங்காவிற்கு புறம்பாக வெளியே 50 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட செயலாளர் எம். வை.
எஸ். தேசப்பிரிய தெரிவித்தார்.
எதிர்வரும் இருவார காலப் பகுதிக்குள் இந்தக் காணிகளை பிரித்து வழங்கக் கூடியதாக விருக்குமெனக் கூறிய மாவட்ட செயலாளர், அதனைத் தொடர்ந்து காணிகளை சுத்திரிகரிக்க வேண்டியிருப் பதாகவும் கூறினார்.
குடியமர்த்தப் படவுள்ள குடும்பங்களுக்கு புத்தளத்தில் அல்லது நாட்டின் ஏதேனும் பகுதிகளில் அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே அவர்களுக்குரிய காணிகள் ஒப்படைக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்டச் செயலாள ருக்குள்ள அதிகாரங்களுக்க மையவே தான் இந்தக் காணியை ஒதுக்கீடு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், காணிகளில் மீள் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக கூடாரங்கள்
அமைத்துக் கொடுக்கப்படுமெனவும் பின்னர் அவர்கள் தமக்குரிய வீடுகளை கட்டுவதற்கான சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்ட காணி வனவிலங்குகளுக்குரிய பகுதிகளிலிருந்து புறம்பாக காணப்படுவதனால் காட்டு யானைகளினால் குடியேற்றவாசிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லையெனவும் இதற்கிணங்க வனவிலங்கு பாதுகாப்பு வலயங்கள் அமைக்கும் பணிகள் துரிதப்படு த்தப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,
இம் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் ,இல்லை. இந்த விடயத்தை மீளக் குடியேறவுள்ள மக்கள் பூதாகரமாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உண்டென்றும் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar