BREAKING NEWS

நாட்டின் பாதுகாப்பு கருதியே புலம்பெயர் அமைப்புக்கள் மீது தடை என்கிறது அரசாங்கம்


விடு­தலைப் புலி­களை அழித்­த­மை­யி­னா­லேயே சர்­வ­தேசம் எம்மை எதி­ரி­யாகப் பார்க்­கின்­றது. நாட்டில் அமை­தி­யை ஏற்­ப­டுத்த சர்­வ­தேச நாடுகள் விரும்பவில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயலாகும் என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரிவித்தார்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேசம் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. நாட்­டிற்கு எதி­ராக செயற்­ப­டுவோர் விரைவில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டினை புரிந்­து­கொள்­வார்கள் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
சர்­வ­தேச அழுத்­தங்கள் இலங்கை மீது அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் தடை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், 
தமி­ழீழ விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களை அழிக்­காது நாட்டை பிரித்துக் கொடுத்­தி­ருந்தால் இன்று சர்­வ­தேச நாடுகள் எம்மைப் போற்­றி­யி­ருக்கும். அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தால் இன்றும் நாட்டில் பிரச்­சி­னைகள் தீர்ந்­தி­ருக்­காது. எனினும், சர்­வ­தேச நாடு­களின் பேச்­சிற்கு இடம்­கொ­டுக்­காது விடு­தலைப் புலி­களை அழித்­த­மை­யி­னா­லேயே இன்று பெரு­ம­ள­வி­லான நாடுகள் எமக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. முப்­பது வருட கால கொடிய யுத்தம் நாட்டின் அமை­தி­யி­னையும் சமா­தா­னத்­தி­னையும் சீர­ழித்­தது. இன்று மத்­திய கிழக்கு நாடு­களில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் யுத்­தமும் தீர்வு காணப்­ப­டாத பிரச்­சி­னை­களும் இலங்­கையில் இல்லை.
சர்­வ­தேச அழுத்­தங்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக திரும்­பி­யி­ருந்த போதிலும் யுத்­தத்­தினை முடி­விற்கு கொண்டு வர வேண்டும் என்­ப­துவே அர­சாங்­கத்தின் தீர்­மா­ன­மாக இருந்­தது. இதுவே சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­க­ளையும் எதிர்ப்­பி­னையும் நாம் சம்­பா­திக்க கார­ண­மாக அமைந்­து­விட்­டது.
தற்­போது இலங்­கைக்கு எதி­ரான யுத்தக் குற்றம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை நடத்தும் ஒரே நோக்கில் ஐ.நா. வும் பல மேற்­கத்­தேய நாடு­களும் செயற்­பட்டு வரு­கின்­றன. ஜன­நா­யகம் பற்றி இவர்கள் பேசு­கின்­றனர். ஆனால், ஓர் ஜன­நா­யக நாட்டில் அத்­து­மீ­றிய விசா­ர­ணை­களை நடாத்தத் தீர்­மா­னிப்­பது அரா­ஜக செயற்­பா­டாகும். இது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பாடு இல்­லையா? இன்று இந்த அர­சாங்­கத்தை பெரும்­பான்­மை­யான மக்கள் விரும்­பு­கின்­றனர். நடை பெற்று முடிந்த தேர்­தல்கள் அனைத்­திலும் மக்­களின் தெரிவு இந்த அர­சாங்­க­மா­கவே இருந்­தது. இவ்­வாறு இருக்­கையில் ஒரு சிறு தொகுதி பிரி­வி­னை­வாத சக்­தி­களின் கதையைக் கேட்டு நாட்­டிற்கு எதி­ராக செயற்­ப­டக்­கூ­டாது.
அதேபோல் புலம்­பெயர் அமைப்­பு­களை தடை செய்­தமை எவ­ரி­னதும் தனிப்­பட்ட விருப்­பத்­திற்­கா­கவோ, பழி­வாங்கும் நோக்­கத்­திற்­கா­கவோ அல்ல. இவர்­களை தடை செய்­தமை நாட்டின் பாது­காப்­பிற்­கா­கவே. யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­களைக் கடந்து வடக்கு மக்கள் போரை மறக்கும் நிலையில் புலம்­பெயர் அமைப்­புகள் மீண்டும் எமது மக்­களின் மனதில் தீவி­ர­வா­தத்­தினை வளர்க்­கின்­றன. இது நாட்டின் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய விடயம். அதேபோல் தடை செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் குற்­ற­வா­ளிகள் இல்­லை­யெனின் அவர்­களை தடை செய்யப் போவ­து­மில்லை. நாட்டில் குழப்­பத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேசம் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றமைக்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.
அதேபோல் இன்று சர்வதேச உதவியுடன் அல்லது அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நாட்டில் பிரிவினையினையும் குழப்பங்களையும் ஏற்படுத்த விரும்புவோர் வெகு விரைவில் இந்த அரசாங்கத்தை புரிந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar