வென்ளை வேனில் வந்த பொலிஸார் கடத்திச் சென்றதாகவும் சிலாபம் பகுதியில் தமது அமைப்பினால் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பில் புகைப்படங்களை காண்பித்து தன்னிடம் விசாரனைகளை மேற்கொண்டதாகவும் கூறி நாடகமாடிய
ஸ்ரீலங்கா தௌத் ஜமாஅத்தைச்சேர்ந்த அங்கத்தவர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்க்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார் பொய்யான முறைப்பாடு மற்றும் சமய முரண்பாட்டை தோற்றுவிக்க முனைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது பதியப்படடுள்ளதாகவும் இன்று அவரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதாகவம் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு மளிகாவத்தையில அமைந்துள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்காரியாலயத்தில் பணிபுரியும் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் வகாப் நசார்தீன் என்பவர் மருதானை பிரதேசத்தில் எ டி எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரை பொலிஸார் எனக்கூறிக் வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக கூறி சனிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பாளர் மொகாமட் ஜவுபர் என்பவர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து மும்முரமாக செயற்பட்ட பொலிஸார் இவரது தொலைபேசி அழைப்புக்களை அடிப்படையாக வைத்து கடத்தப்பட்டவர் என கூறப்பட்ட அப்துல் வகாப் நசார்தீன் என்பவர் கொட்டாஞ்சேனையில் வைத்து நேற்று அதிகாலை 4 00 மனிக்கு கண்டுபிடித்து பின்னர் கைது செய்யப்பட்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை ஒன்று தொடர்பில் இவர் இவவாறானதோர் நாடகத்தை அரங்கேற்றி பொலிஸாரை ஏமாற்றியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.