(ஐ. ஏ. காதிர் கான்)
நம் நாட்டில் இலைமறை காயாகவுள்ள இளம் கலைஞர்களுக்கு
களம் அமைத்துக் கொடுத்துதவும் முகமாக, இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்தின் "தென்றல்
எப் .எம். " மாதந் தோறும் வழங்கி வரும் "பொன் மாலைப் பொழுது " இசை நிகழ்ச்சி, மே மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன-ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீல. சு . க . மத்திய கொழும்பு அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், தேசமான்ய - தேசபந்து புரவலர் ஏ . பி. அப்துல் கையூம், இளைப்பாரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அரசரத்தினம் , தேசபந்து முத்தப்பன் செட்டியார் , தேசமான்ய - தேசபந்து திருமதி கௌசல்யா தேவி கோவிந்தபிள்ளை ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அறிவிப்பாளருமான எம் . இர்பான் தெரிவித்துள்ளார்.
