மாவனல்லை கெரமினிய தாருல் ஹிக்மா பள்ளிவாயலுக்கு இன்று மாலை 5.30 மணியளவில் திடீரென பிரவேசித்த இரு பௌத்த பிக்குகள் பள்ளிவாயலை மூடிவிடும் படி உத்தரவிட்டதாக அப்பள்ளிவாயலின் செயலாளரும் ஆசிரியருமான ஹிஸ்மத் எமது டெய்லி ஸிலோனுக்குத் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியொன்றில் திடீரென வருகை தந்த இந்த இரு பிக்குகளும் சுமார் அறை மணி நேரம் அப்பள்ளிவாயலில் இருந்தவர்களிடம் சூடான வார்த்தைகளினால் பேசினர். மீண்டும் தாம் வருவதாகவும் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் வந்த முச்சக்கர வண்டியின் சாரதி பள்ளிவாயலை வீடியோ எடுத்தார். இப்பிரதேச முஸ்லிம்களுக்கு வேறு பள்ளிவாயல்கள் இருப்பதனால் இந்தப் பள்ளிவாயலை மூடிவிடவேண்டும் என்பதே வந்தவர்களின் கோரிக்கையாக இருந்தது. ”இப்பள்ளிவாயலை மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நாம் தெரிவித்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனாலேயே நாம் நேரடியாக வந்தோம்” என வந்த பௌத்த தேரர்கள் இருவரும் கூறினர்.
இது குறித்து தற்பொழுது நாம் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளோம். பொலிஸார் எமது பள்ளிவாயலுக்கு பாதுகாப்பு தருவதாக ஏற்றுக்கொண்டனர். தற்பொழுது இப்பிரதேசத்தில் எந்தவிதப் பதற்றமும் இல்லையெனவும் அவர் மேலும் எம்மிடம் மேலும் குறிப்பிட்டார்.