BREAKING NEWS

அளுத்கம, பேருவல தாக்குதலை பௌத்த சிங்கள பயங்கரவாதிகளே மேற்கொண்டனர்

அளுத்கம, பேருவல தாக்குதலை பௌத்த சிங்கள பெயரைக்கொண்ட பயங்கரவாதிகளே மேற்கொண்டனர் என அமைச்சர் வாசு தேவவ நானயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை கொழும்பு கிங்ஸ் பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரித்ததாவது,
இந்த சம்பவம் சிங்கள முஸ்லிம் மோதல் அல்ல மாறாக கொள்ளைக்கோஷ்டி ஒன்றே இதனை திட்டமிட்டு செய்துள்ளது. அவர்கள் வீடுகளை கொள்ளiயிட்ட பின் தீயிட்டுள்ளார்ளகள். பழைய உடைகளைக்கூட திருடிச்சென்றுள்ளார்கள்.

இதுவெல்லாம் ஊரடங்கு நேரத்திலேயே நடந்துள்ளது. இதற்குரிய பொறுப்புதாரியாக அரசாங்கமே இருக்கிறது. பொலிசார், மற்றும் இராணுவத்தினர் தமது கடமையை சரியாக செய்யவில்லை.

இம்மாதிரியான நேரத்தில் உயர்மட்டத்தை கேட்காது சட்டத்தை நடை முறைப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் உண்டு ஆனாலும் அவர்கள் இதனை செய்யவில்லை.

இந்த தாக்குதல் சம்பந்தமாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதில் ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என நான் கேட்கவுள்ளேன். அந்த ஆணைக்குழு மூலம் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் பௌத்த தேரர்கள், உலமாக்கள் ஜனாதிபதி இணைப்பாளர் மசூர் மௌலானா, உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar