ஞானசாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!
மகிந்த அரசை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை! ஞானசாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததார்.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்கள் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நான் பதவியை இராஜினாமாச் செய்யத் தயார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்திருக்கிறேன்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு கட்சியின் உயர் பீடம் எனக்கு அனுமதி தந்துள்ளது.
எதிர்வரும் இரு தினங்களுக்குள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உள்ளேன் அத்துடன் நீதியமைச்சர் என்ற வகையில் ஞானசார தேரருக்கு எதிராகவும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்