BREAKING NEWS

ஒரு இனத்தை காட்டிக்கொடுக்க, அடிமைப்படுத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது


*கறுப்பு ஜ_லை, புலிப்பயங்கரவாதம் என்பவற்றின் விளைவுகளை எவரும் மறந்துவிடக்கூடாது

மனித உரிமை பற்றிப் பேசிக்கொண்டு பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசத்தின் செயற்பாடுகளில் நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சட்டங்களில் மட்டுமன்றி அனைத்திலும் அவர்கள் இருபக்கம் தலையாட்டும் பச்சோந்திகளாக செயற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மனித உரிமை, இனநல்லிணக்க செயற்பாடுகளில் எம்மிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் நல்லிணக்கத்துடன் செயற்படுகையில் நம்மிடையே நல்லிணக்க மில்லாத சில அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வதேசத்திற்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து வருகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்நாட்டில் மக்கள், இனம், மதம் தொடர்பில் எதையும் பேசாத இத்தகைய அரசியல்வாதிகள் சர்வதேசமெங்கும் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி போகம்பறை சிறைச்சாலையை அரசாங்க த்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பேற்கும் விசேட வைபவம் நேற்று போகம்பறை முன்றலில் நடை பெற்றது.
அமைச்சர்கள், சந்திரசிறி கஜதீர, கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:
போகம்பறை சிறைச்சாலையை அபிவிருத்திக்காக கையேற்கும் அதேவேளை இந்த சிறைச்சாலை பள்ளேகலைக்கு மாற்றப்படுகிறது.
இது நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறைச்சாலையாகும். அன்று எமது படையினர் இங்கிருந்தது போன்று எமது அரசியல் வாதிகளும் இந்த சிறைக் கூண்டுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ போன்றோரும் இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனது அதிர்ஷ்டம் நான் இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட் டிருக்க வில்லை. மெகசீன் மற்றும் தெற்கிலுள்ள சிறைகளில் தடுத்துவைக்கப் பட்டிருந்தேன்.
சிறைச்சாலைகளை மூடிவிட்டு குற்றச் செயல்கள் இல்லாத நாட்டை உருவாக் குவதே எமது நோக்கம். சகல சிறைச் சாலைகளும் புனர் வாழ்வு நிலையங்களாக மாற்றப்படவேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு. புலிகளையும் புலிகளின் தற்கொலையாளிகளையும் ஆயுதம்தரித்து மனித உயிர்களை அழித்தொழித்த புலிகளுக்கும் எம்மால் புனர்வாழ்வளிக்க முடியுமானால், அவர்களை மீண்டும் சமூகத்தோடு இணைக்க முடியுமானால், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது எம்மால் முடியாத காரியமல்ல.
அநேகமாக நாம் சிறைச்சாலைகளைப் பார்க்கும்போது, சிறைச்சாலைகள் நீதி மன்றத்தின் (ரிமாண்ட் சிரபார) தடுப்புக்காவல் தண்டனை பெற்றோரே பெருமளவில் உள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு செல்லும்போது அத்தகையோருக்கு 2 வாரம், மூன்றுவாரம் என சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இவர்கள் சிறு சிறு குற்றம் செய்தவர்களே.
நான் அண்மையில் கண்ட ஒரு உண்மை, தொலைபேசியொன்றை திருடியவர், காட்டுக்குள் பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு சிறைத்தண்டனை, விதிக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டியிருந்தாலும் பரவாயில்லை அத்துமீறி காட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தமைக்காக அவருக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்கிறார். எனினும் அண்மைக் காலங்களில் மரக்குற்றிகள் திருடி ஏற்றிச் செல்லும் அநேக லொறிகளை பார்க்க முடிகிறது. இது தொடர்பில் நாம் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும் இது தொடர்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டியுள்ளது.
சிறைச்சாலைகளை நிரப்புவது எமது நடவடிக்கையாக அமையக் கூடாது. அவைகளை புனர்வாழ்வு நிலையமாக்குவதே இடம்பெறவேண்டும்.
இன்றுள்ள அரசியல் வாதிகள் அன்று என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, எட்மன் சமரக்கொடி போன்ற இடதுசாரி அரசியல் தலைவர்கள் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். இது சிந்திக்க நாம் வித்திட்ட வேண்டியது அவசியம்.
தற்போது பலர் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் நாம் அந்த தண்டனையை நிறைவேற்ற ஆரம்பிக்கவில்லை. அவர்களும் தற்போது சிறைக்கூடங்களிலேயே உள்ளனர். இதற்கு அனுமதி வழங்கும் கையொப்பத்தை இடுவதற்கு என்னால் இன்னும் முடியாமலுள்ளது. இது தொடர்பிலும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மதத்தலைவர்களின் ஒத்துழைப்புடன் நீதிமன்றங்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்துவது சிறந்ததாகும்.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலேயே நாம் அரும்பாடுபட்டு வருகிறோம். தற்போது மக்கள் மத்தியில் நல்லிணக்கம் உள்ளது. எனினும் அரசியல்வாதிகளிடம் அது இல்லாமல் போயுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சில உள்நாட்டில் கலந்துரையாடுவதை விடுத்து சர்வதேச ரீதியில் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர் அனைத்தையும் வெளிநாட்டுடனேயே பேசுகின்றனர்.
அரசாங்கத்தில் ஏதாவது தவறு தொடர்ந்தால் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அதனைப் பொறுப்பேற்க வேண்டும்.
எனினும் இப்போது அனைவரும் எம் பக்கமே விரல் நீட்டுகின்றனர்.
அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீற, ஒரு இனத்தைக் காட்டிக் கொடுக்க, அடிமைப்படுத்த ஒருபோதும் இடமளிக்காது.
கறுப்பு ஜூலை, புலி பயங்கரவாதம் அவற்றின் விளைவுகளை நாம் அனுபவிக்க நேர்ந்தது என்பதை மறக்கக்கூடாது.
கண்டியில் தலதாமாளிகை அநுராதபுரத்தில் ஸ்ரீ மகாபோதி ஆகியவற்றுக்கு முன்பாகவே ஏகாதிபத்திய வாதிகள் திட்டமிட்டு சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளனர். தெற்கிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது. இதுவும் அன்றுள்ள ஆட்சியாளர்களின் அழுத்தமே நாம் வழிபடும் பெளத்த வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலேயே அவர்கள் சிறைச்சாலைகளை அமைத்துள்ளனர்.
மனித உரிமை பற்றி பேசுபவர்களே இவ்வாறு செயற்பட்டுள்ளனர். நாம் எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாத்து வருகிறோம் என்பதை தாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar