BREAKING NEWS

பிரதி அமைச்சரை பொது மக்கள் புதன், வெள்ளிக் கிழமைகளில் சந்திக்கலாம்


               (ஐ. ஏ. காதிர் கான்)

கொழும்பு மற்றும் கொழும்பு மத்திய தொகுதியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில்,
பொது மக்கள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர்  முஸ்தபாவை நேரடியாகச் சந்தித்து முறையிடுவதற்கும், தீர்வுகளைப்  பெற்றுக் கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதற்கென வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களை, பொது மக்கள் தினமாக பிரதி அமைச்சர் பிரகடனப்படுத்தியுள்ளார். இதன் பிரகாரம், ஒவ்வொரு  புதன்கிழமையும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், கொழும்பு-14, கிறேண்ட்பாஸ் வீதி, 182 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள  பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் பிரதி அமைச்சரை பொது மக்கள் பிரத்தியேகமாகச்  சந்திக்க முடியும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar