ஸ்ரீல. சு கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (02) புதன் கிழமை தனது 45வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார்.
பிரதியமைச்சர் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு றோயல் கல்லூhயில் கற்று பின்னர் இலங்கை சட்டக்கல்லூhயில் சட்டப்படிப்பை பெற்று மிகச்சிறந்த சட்டத்தரணியானார்.
1969.07.02ம் திகதி கன்டியில் பிறந்து 2004ம் ஆண்டு ஸ்ரீல. சு. கவின் அமைப்பாளராக இணைந்து இப்பிரதேசத்தில் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளின் பேரில் சு. கவின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.
இவருக்கு சட்டத்தரணியான பாத்திமா பாயிசா என்ற ஒரேயொரு சகோதரியும் பாத்திமா அமீனா, பாத்திமா ஆயிஷா என்ற இரு புதல்விகளும் உள்ளனர். இவரது மனைவியான பாத்திமா ரிபாவும் சிறந்த சட்டத்தரணியாவார் என்பதுடன் முன்னாள் இலங்கை வங்கி தலைவரான ஜெஹான் காசிமின் புதல்வியுமாவார்.
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, ‘மக்கள் நாயகி’ பாத்திமா அமீனா, மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
தகவல், காதிர்கான்