BREAKING NEWS

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை-ஆணைக்குழுவுக்கு ஆலோசனை


காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூவரடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக்குழுவில் உரிய துறைசார்ந்த, விடயம் தொடர்பில் சர்வதேச அபிமானத்தைப் பெற்றுள்ள நிபுணர்கள் மூவர் உள்ளடங்குகின்றனர்.
அரச சட்டத்தரணி மஹாமான்ய ஸ்ரீமத் டெஸ்ட்மன்ட் டீ சில்வா தலைமையில் அரச சட்டத்தரணி பேராசிரியர் ஸ்ரீமத் ஜெஃரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிறேன் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்ப ட்டுள்ள செயற்பாடுகளை மிகுந்த சாத்தியமானதாக முன்னெடுப்பதற்காக சட்டம் உட்பட குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான துறை சம்பந்தமாக போதிய அறிவு மற்றும் விரிவான அனுபவங்களைக் கொண்ட நிபுணர்களின் சேவை மிகுந்த பயனுள்ளதெனக் கருதியே ஜனாதிபதி அவர்கள் மேற்படி ஆணைக்குழுவின் செயற்பாடு மற்றும் விடயங்களை விரிவுபடுத்த தீர்மானி த்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க ப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவராகச் செயற்படும் அரச சட்டத்தரணி டெஸ்மண்ட் டி சில்வா ஆயுத மோதல் தொடர்பான சட்டங்கள் சம்பந்தமாக பரந்த அறிவினைக் கொண்ட நிபுணராவார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனானினால் ஒரு முறை ஐ. நா. வின் குற்றவியல் நீதிமன்றத்துக்கான பிரதம ப்ரொசிகியூட்டராக தனிப்பட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
டெஸ்மண்ட் டி சில்வா இலங்கை சுதந்திர அமைப்பின் ஸ்தாபக ஆசானும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் சுகாதார அமைச்சராகவிருந்த அமரர் ஜோர்ஜ் ஈ. டி. சில்வாவின் பேரனுமாவார். டெஸ்மண்ட் டி சில்வாவின் தந்தையாரான ப்ரேட் ஈ.டி. சில்வா கண்டி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து பிரான்ஸ் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளின் இலங்கை தூதுவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஸ்ரீமத் டெஸ்மண்ட் அவர்கள் லண்டனில் சட்டத்துறையில் அளப்பரிய சேவையாற்றி யவர். 2010ல் பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவை மற்றும் ஐ. ஆர். ஏ. அமைப்புடனான மோதலின்போது பிரிட்டிஷ் படையினர் வட அயர்லாந்தில் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவராக இவர் செயற்பட்டுள்ளார்.
பேராசிரியர் அரச சட்டத்தரணி ஜெப்ரி நைஸ் லண்டனில் சர்வதேச சட்டம் தொடர்பான பேராசிரியராவார். சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் தொடர்பான பேராசியராவார். சர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் மிலோசெவிக் தொடர்பான நீதிமன்றத்தில் பிரதம ப்ரொசிகியூட்டராக பணிபுரிந்துள்ளார். இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் போதியளவு அனுபவம் பெற்றவரும் சர்வதேச சட்ட நிபுணருமாவார்.
பேராசிரியர் டேவிட் க்ரேன், சியரா வியோன் தொடர்பான விசேட நீதிமன்றத்தின் பிரதம வழக்கறிஞராக கொபி அனானினால் தனிப்பட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். ஐ. நா. வின் விடயத்துக்குப் பொறுப்பான பொதுச் செயலாளர் தரத்தைக் கொண்டவராக அவர் திகழ்ந்துள்ளார். தற்போது 50 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் லைபீரிய ஜனாதிபதி சார்ள்ஸ் டெயிலரை கைது செய்தமை, அவர் தொடர்பில் குற்றவியல் கோவையை தயார்படுத்தியமை மற்றும் வழக்கை விசாரணை செய்தல் போன்ற விடயங்களில் பிரதான பொறுப்பிலிருந்து செயற்பட்ட வராவார். காணாமற்போனோர் தொடர் பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைக் கிணங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar