BREAKING NEWS

வருட இறுதியில் மாத்திரமே ஆசிரிய இடமாற்றங்கள்


* மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புஆசிரியர் இடமாற்றங்கள் வழங்கும்போது அதனை வருட இறுதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருடத்தின் நடுப்பகுதியில் இட மாற்றங்கள் வழங்கும்போது மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு, பரீட்சைகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஆசிரிய நியமனங்களின் போது பாடசாலைகளின் பெயர் குறித்து நியமனங்கள் வழங்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி மாகாண முதலமைச்சர்களிடம் கேட்டுள்ளார்.
முதலமைச்சர்களுக்கான விசேட செயல மர்வொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பிரதமர் தி.மு. ஜயரட்ன, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட முதலமைச் சர்களின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
மாணவர்களுக்கான சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்களுக்கான நலன்புரி விடயங்கள் முறையான திட்டமொன்றின் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும்.
ஆசிரியர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முறையான செயல்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் சில பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டுக்கு இதுவே முக்கிய காரணமாகியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள ஜனாதிபதி; ஆசிரியர்களுக்கான நலன்புரி விடயங்கள் முறையாக இடம்பெறாமை குறித்தும் எதிர்காலத்தில் திட்டமிட்ட முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது முக்கியம் எனவும் கல்வியமைச்சருக்கும் மாகாண முதலமைச்சருக்கும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசம், விவசாயம் ஆகிய துறைகளில் மாகாண ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த மீளாய்வும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப் படவுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் நிலவும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
இதற்கென தற்போது முன்னெடுக் கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய்த்தடுப்பு நடவடிக் கைகளுக்காக இவ்வருடத்திற்கு 600 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிதியில் 75 வீதமானவை வடமத்திய மாகாணத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் குடிநீர்த் திட்டங்களை செயற்படுத்துதல், நடமாடும் மக்கள் சேவைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுத் திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.
அந்தந்த பிரதேசங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் கழிவு அகற்றல் முகாமைத்துவ நடவடிக்கைகள், மாகாண ரீதியில் அச்சுறுத்தலாகியுள்ள இயற்கை அனர்த்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது இயற்கை அனர்த்தங் களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விடயங்களைக் கேட்டறிந்துகொண் டுள்ளார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar