BREAKING NEWS

பதுளை முஸ்லிம்களை ஏமாற்ற பொதுச்சின்னத்தில் போட்டியிட முடிவு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ¤ம் மலையக முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே
முஸ்லிம்களின் பிரதான இவ்விரு கட்சிகளும் இந்த இணக்கத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுங் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும், இவ்விரு கட்சிகளும் பொதுச் சின்னத்தில் இணைந்து களமிறங்குவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. தேர்தலில் இணைந்து களமிறங்குவது குறித்து மு. கா. தலைவர் அமைச்சர் ஹக்கீமும் அ. இ. ம. காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும். சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன். மலையக முஸ்லிம் கவுன்ஸிலும் இவ் விரண்டு தலைவர்களையும் சந்தித்து தேர்தலில் கூட்டாக களமிங்குவது குறித்துப் பேசி யுள்ளனர். அதேவேளை அமைச் சர்களான றவூப் ஹக்கீம். ரிசாத் பதியுதீன் ஆகியோர் ஊவாப் பிரதேசங்களுக்கு தனித்தனியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து திரும்பியுள்ளனர்.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண் டுமென்று அடிக்கடி பேசப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் குறைந்தது இவ்விரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத் தப்பட்டுள்ளது. பொதுவாக தேர்தல்களில் தனித்துப் போட்டி யிடும் மு. கா. பொதுச் சின்னத் தில் போட்டியிட முன்வந்திருப் பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது தொடர்பில் மு. கா. வின் உயர் பீடத்தின் அங் கீகாரத்தைப் பெற வேண்டிய சூழல் இருக்கின்றது. வழ மையாக கட்சித் தலைவருக்கே இறுதித் தீர்மானம் எடுக்கும் முடிவை மு. கா. உயர்பீடம் வழங்குவதால் இதுவும் ஒரு பிரச்சினையாக இருக்க வாய்ப் பில்லை.

எது எப்படியிருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினம் ஆரம்பமாவதால் எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் இவ்விரு கட்சிகளும் தமது தீர்க்கமான முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய கட்சிகளில் போட் டியிட உத்தேசித்துள்ள வேட் பாளர்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் அதற் கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டால் வேறொரு வியூகம் அமைத்து செயற்படுவதற்கான சூழ்நிலை இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar