மகள் கருகி மரணம், மனைவி, மாமியார் வைத்தியசாலையில்
பிரிந்திருந்த மனைவி தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளார்.
இச் சம்பவத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி, மகள், மாமியார் எரிகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் பின்னர் குழந்தை உயிரிழந்தது. சந்தேக நபர் கைதாகி 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது :-
குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்திருந்த மனைவியை தன்னுடன் வருமாறு கணவன் அழைத்துள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த மனைவி தங்கியிருந்த வீட்டை பெற்றோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய போது
வீடு முற்றாக எரிந்து சேதமடைந்தது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தீயில் கருவி உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்து (பலத்த தீக்கயங்களுக்குள்ளாகி) இரத்தினபுரி வைத்திய சாலையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவத்தில் தருஷி நெத்சரா (வயது 2) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குருவிட்ட கிரிபத்தலை எனுமிடத்தில் வசித்த கணவன் மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு இடம்பெற்றுள்ளது. இதனால் கணவனும் மனைவியும் இருவேறு வீட்டில் வசிந்து வந்துள்ளனர்.
மனைவியை தன்னுடன் வந்து தங்குமாறு பலமுறை அழைத்த போதும் அதற்கு இணங்காது மனைவி மறுத்துள்ளார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.