லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய முற்போக்கு மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தென்கிழக்கு கலை இலக்கியவாதிகளின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை,மாலை 4.00 மணியளவில் சாய்ந்தமருது மல்ஹருல் சம்ஸ் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் ஊடகத்துறை பிரதி அமைச்சர்- வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
அத்துடன் பிரபல இலக்கியவாதிகளான ஹஸன் மௌலானா, யூ.எல். ஆதம்பாவா, எஸ். முத்துமீரான், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா, விரிவுரையாளர் ஏ.எப்.எம்.அஷ்ரஃப், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி எம். தாசிம், கவிஞர் நவாஸ் சௌபி உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளனர்.
இதன்போது, தென்கிழக்கு பிராந்தியத்தில் இலக்கியத் துறையின் வளர்ச்சி பற்றியும் இப் பிராந்தியத்தில் இலக்கியத்துறைக்காக சேவையாற்றும் மூத்த படைப்பாளிகள் கௌரவிப்பு சம்பந்தமாகவும் இளம் எழுத்தாளர்களின் விபரங்கள் தொகுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் JP தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு வசந்தம் எப்.எம், மெட்ரோ மிரர் என்பன ஊடக அனுசரணை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment