BREAKING NEWS

ISIS புதிய கிலாபத் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது



1ஈராக் சிரியா ஆகியாநாடுகளில்  தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய கிலாபத் அரசு ஒன்றை உருவாக்கியிருப்பதாக  இஸ்லாமியத் போராளிகள் அமைப்பான ஐஸிஸ்அறிவித்திருக்கிறது.

இந்த புதிய  கிலாபத் அரசின் கலீபாவாகவும் , உலகின் அனைத்து முஸ்லிம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. அவர் இனி கலிபா இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது அறிவித்துள்ளது
இந்த கிலாபத்  வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு ஈராக்கின்  தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது. இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒலிவடிவப் பிரகடனம் ஒன்றில், இந்த போராளிகள்  அமைப்பு  எல்லா முஸ்லிம்களும் இந்தப் புதிய கலிபாவுக்கு  தங்கள் விசுவாசத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இந்த புதிய நாடு, இனி சாதாரணமாக, “இஸ்லாமிய அரசு” என்று மட்டுமே அறியப்படும் என்று அது அறிவித்துள்ளது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar