BREAKING NEWS

2 கோடிரூபா ஓய்வ+திய நிலுவைப்பணம் அதிகாரிகளால் திட்டமிட்டு மோசடி


8 பேர் கைது; ஏனையோரை கைது செய்ய நடவடிக்கை
அவதானத்துடன் இருக்குமாறு ஓய்வ+தியக்காரருக்கு வேண்டுகோள்
ஓய்வூதியம் பெறுவோரின் சுமார் இரண்டு கோடி ரூபா நிலுவைப் பணத்தை மோசடி செய்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுவோரின் நிறுவனப் பணத்தை சில அதிகாரிகள் திட்டமிட்டு மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் இவ்வாறான மோசடிகள் நடைபெறுமானால் உடனடியாக அறியத்தருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
2009 முதல் 2013ஆம் ஆண்டு வரை காலமும் கேகாலை, வரக்காபொலை பிரதேச செயலகத்திலுள்ள பெண் இலிகிதர் ஒருவர் அவரது கணவருமாக இணைந்து சுமார் ஒரு கோடியே 67 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஓய்வூதியம் பெறும் ஒருவர் செய்த முறைப்பாட்டை யடுத்தே இந்த மோசடி அம்பலமாகியது.
இதனையடுத்து பொலிஸ் திணைக்களத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடர்ந்தும் இது தொடர்பாக நடைபெறும் மோசடிகளைக் கண்டறிய மேற்படி குழு துரித விசாரணைகளை நடத்தி வருகிறது. ஓய்வூதியக்காரருக்கு உரிய பணத்தை இவ்வாறு மோசடி செய்யும் ஒருவர் கைது செய்யப்படுவதுடன் இது தொடர்பான வழக்கு நடைபெறும் காலம் முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம்.
சில வேளைகளில் இது தொடர்பான வழக்கு 20 வருடம் நடைபெற்றாலும் சந்தேக நபர் 20 வருடங்களும் தடுத்துவைக்கப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாச்சியாதீவு பிரதேச செயலகத்தில் நிறுவனப்பணம் 11 இலட்சத்து 48 ஆயிரத்து 838 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
கம்பளை பிரதேச செயலக கணக்காய்வாளர் 5 இலட்சத்து 15,653 ரூபாவையும் மோசடி செய்துள்ளார்.
இதேவேளை, தென் மாகாண முன்னாள் செயலாளர் ஒருவர் இரண்டு ஓய்வூதியத்தை பெற்று சுமார் 50 இலட்சத்து 49,661 ரூபா வையும் மோசடி செய்துள்ளார்.
மேலும் கல்நேவ பிரதேச செயலகத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் நிலுவைப்பணமான 14 இலட்சத்து 15,653 ரூபாவும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar