இதற்கமைய செப்டெம்பர் 6 முதல் 17 வரை தேசிய தலைவரின் தலைமையில் பொது கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சிறீகொத்தா கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய ஊவா மாகாணசபை தேர்தலை மையப்படுத்தியே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. அத்தோடு செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தலைமையில் பதுளை மொனராகலையில் பிரசார கூட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி கூட்டம் பண்டாரவளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment