BREAKING NEWS

ஸ்ரீல. சு. க., ஐ. தே. க. இணைந்து ஏற்பாடு

ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இலங்கையில்


ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. ‘
ஆசிய சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
ஆசிய அரசியல் கட்சிகளின் 8வது சர்வதேச மாநாட்டை இலங்கையின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொழும்பில் நடத்தவுள்ளன. இம்மாநாட்டில் 33 நாடுகள் பங்குபற்று வதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப் பதுடன், இம்மாநாடு ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு மாநாடாக அமையவுள்ளது.
2013ஆம் ஆண்டு மே மாதம் சீனாவின் ஷனிக்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். ஆசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இம்மாநாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு குறித்து ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளனர். இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். ஆசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இம்மாநாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு குறித்து ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண் டிருந்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar