உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஐந்து திருத்தச் சட்டமூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது தொடர்பான சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இ
து தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆட்சேபனை தெரிவித்தபோதும் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபையில் அறிவித்தார். மாநகரசபைகள் திருத்தச் சட்டமூலம், நகரசபைகள் திருத்தச் சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தச்சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் விசேட ஏற்பாடுகள் திருத்தச்சட்டமூலம் என்பனவே நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
மேற்படி திருத்த சட்டமூலங்கள் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான சிக்கல் காரணமாக இந்தச் சட்டமூலங்களில் திருத்தங்கள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment