BREAKING NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு!


Media forum
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி கொழும்பு – 07 இலுள்ள தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜுன் 21ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஏனினும் குறித்த சமயத்தில் தர்கா நகர் மற்றும் பேருவளை உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கையினை கருத்திற்கு கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கட்கிழமை கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வருடாந்த மாநாட்டை நடத்த தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar