BREAKING NEWS

ஆயுதத்தை களைவதற்கு அதிக பெரும்பான்மை பலஸ்தீனர் எதிர்ப்பு

பலஸ்தீன எதிர்ப்பு போராட்டக்குழுக் கள் ஆயுதத்தை களைவதற்கு காசா வில் வாழும் பெரும்பாலான பலஸ் தீனர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள் ளது.

மக்கள் கருத்துக்கான பலஸ்தீன மையம் கடந்த ஓகஸ்ட் 14 முதல் 19 ஆம் திகதிகளில் காசாவில் வாழும் 1,000 பலஸ்தீனர்களிடம் இந்த கருத் துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
இதில் பங்கேற்ற 93 வீதமானவர்கள் பலஸ்தீன எதிர்ப்பு போராட்டக்காரர்களின் ஆயுதம் களையப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். காசாவின் தற்போதைய மோதலுக்கு நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பலஸ்தீன போராட்டக்குழுக்கள் ஆயுதத்தை களைய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
இஸ்ரேலுடனான எதிர்ப்பு போராட்டம் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்லது ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று 90 வீதமான பலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீட்டில் இஸ்ரேல் மீது யுத்த குற்ற விசாரணையை முன்னெடுப்பதற்கு 80 வீதமான காசா பகுதி மக்கள் ஆதரவு ஆளித்துள் ளனர். அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேல் ஆதரவு நிலைப் பாட்டைக் கொண்டிருப்பதாக 80 வீதமான பலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஹமாஸின் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 68 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் உறுதி செய்தபோதும் இந்த எண்ணிக்கை 150க்கும் அதிகம் என ஹமாஸ் குறிப்பிடுகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar