BREAKING NEWS

பள்ளிக்குள் துஷ்பிரயோகம். வாக்களித்த முஸ்லிம்;கள் முட்டாள்களா?


Arst
பள்ளிவாசலில் வைத்து பாடசாலை மாணவர்களுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்ட வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சுல்தான் மரிக்காரை கைது செய்வதற்கு பொலிசார் வலை விரித்துள்ளனர்.
கல்விச் சுற்றுலா சென்ற 7 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் சுல்தான் மரிக்கார் தற்போது தலை மறைவாகியுள்ளார்.

வனாத்தவில்லு- கரத்தீவு பிரதேச பாடசாலையின் ஆண் மாணவர்கள் 7 பேரே இவரால பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வனாத்தவில்லு – கரத்தீவு பகுதி முஸ்லிம் பாடசாலை ஒன்றின் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கடந்த 2ஆம் திகதி கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்குச் சென்ற இந்த சுற்றுலாவில் 53 மாணவர்கள், 35 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 6 ஆசிரியைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூவர் அங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சார்பில் சென்றுள்ளார்.
வெலிகம- கப்பல்துறை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 2ஆம் திகதி இரவு மாணவர்கள் தங்கியுள்ளனர். அதன்போது படுக்கையில் 7 மாணவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர் பாலியல் புரிந்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த ஒருவர் புத்தளம் வலய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார். பின்னர் வனாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிரதேச சபை உறுப்பினர் குற்றம் புரிந்துள்ளமை தெரியவ ந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய வனாத்தவில்லு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar