ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியாது என முன்னாள் சட்டமா அதிபர் உட்பட பலர் தெரிவித்துள்ளமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக எவரேனும் சவாலுக்கு உட்படுத்தினாலும் அரசு அதனை பொருட்படுத்தப்போவதில்லை. மீண்டும் தேர்தலில் போட்டியிடும் மனோநிலையிலேயே ஜனாதிபதியும் உள்ளார்.
இது தொடர்பாக அவர் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்வார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment