ஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை பிறைக் கூட்;டத்தில் தீர்மானம்
துல்ஹிஜ்ஜஹ் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் துல்கஃதாஹ் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து 26 வெள்ளிக்கிழமை மாலையுடன் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை ஆரம்பிக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு பிரதி தலைவரும் பிரதம இமாமுமான மெளலவி முஹம்மத் தஸ்லீம் பாரி தெரிவித்தார்.
சங்கைமிகு இம்மாதத்தின் முதல் நாட்களிலும் நோன்பு நோற்பது “ஸ¤ன்னத்” ஆகும். எனினும் இம்மாதம் 8ம் (தர்பிய்யஹ்) நாளான 04-10-2014 சனிக்கிழமையும் 9ம் (அரபா) நாளான 05-10-2014 ஞாயிற்றுக்கிழமையும் நோன்பிருப்பது அதி விசேட ‘ஸ¤ன்னத்” ஆகும். ஆனால் பெருநாள் தினத்திலோ அடுத்து வரும் “அய்யாமுத்தஷ்ரீக்” தினங்களான பிறை 11 செவ்வாய் 12 புதன் 13 வியாழன் ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பிருப்பது ஹறாம் ஆகும், எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
புனித துல்ஹிஜ்ஜஹ் 9ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஸ¤பஹ் தொழுகையுடன் தக்பீர் ஆரம்பமாகி துல்ஹிஜ்ஜஹ் 13ஆம் நாளான (09-10-2014) வியாழக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துடன் நிறைவு பெறும். இக்காலப் பகுதியிலுள்ள ஒவ்வொரு பர்ழான, ஸ¤ன்னத்தான தொழுகைகளுக்குப் பின்னும் தக்பீர் சொல்லப்படும்.
அவ்வாறே புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் 10 நாட்களிலும் குர்பான் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகைகளில் ஒன்றைக் கண்டாலும் “அல்லாஹு அக்பர்” என்று ஒருமுறை கூறிக்கொள்வது “ஸ¤ன்னத்” ஆகும்.
இவ்வாண்டு உழ்ஹிய்யாஹ் கடமையை நிறைவேற்ற நாடியுள்ளவர்கள் புனித துல்ஹிஜ்ஜஹ் மாத ஆரம்பத்திலிருந்து அதாவது 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஃரிபிலிருந்து அதை நிறைவேற்றும் வரை தமது உடலின் எப்பகுதியிலிருந்தும் உரோமங்களையோ நகங்களையோ களைவதைத் தவிர்த்துக் கொள்வது “ஸ¤ன்னத்” என்ற வகையில் அதைப் பின்பற்றி ஒழுகுவதும் தியாகத்தின் ஒரு அம்சமாகும்.
இதே வேளை உழ்ஹிய்யாஹ் விடயத்தில் சமகாலத்தில் ஆங்கங்கே மாற்று மதச் சகோதரர்களில் ஒரு சிலரிடமிருந்து வழக்கமாக எழுந்து வரும் எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் கருத்திற் கொண்டு குர்பானி பிராணிகளை அறுத்தல் மற்றும் வாகனங்களில் ஏற்றி இறக்குவதில் கருணை காட்டல் பிராணிகளை கொள்வனவு, விற்பனை செய்கையில் அவற்றின் வயது நிறம், குறி போன்ற தேவையான விபரங்கள் அடங்கிய பற்றுச் சீட்டுக்களை உடன் வைத்திருத்தல், மற்றும் அறுக்கப்பட்ட பிராணியின் கழிவுப் பொருட்களை முறையாகவும் மரியாதையாகவும் புதைத்து விடுவது உட்பட அரசின் சகல சட்ட திட்டங்களையும் கடைப்பிடிக்கும் படியும் எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் எமக்குப் போதிக்கும் வழிகாட்டல்களையும் பாரம்பரிய பண்பாடுகளையும் பேணிக் காத்து எவ்வகையிலும் எவரினதும் உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ எவரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகும் வகையிலோ நடந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
கண்டிப்பாக எதிர்வரும் 08-10-2014 புதன் கிழமை போயா தினமாகையால் அன்றைய பகலிலோ இரவிலோ பிராணிகளை அறுப்பதையும் மாமிசங்களை எடுத்து வேறு இடங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ளவும்.
Post a Comment