BREAKING NEWS

அமைச்சர் பஷீர் ஷேகு தாவுத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை?



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (26-09-2014) கொழும்பிலுள்ள தாருஸ் ஸலாமில் கூடியிருந்தது. இதன் போது கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் தொடர்பில் கடுமையான விமரசனங்களும் கண்டனங்ளும் வெளியிடப்பட்டுள்ளன. அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் சிலர் விடாப்பிடியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அமைச்சர் பஷீர் ஷேகு தாவுத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைமையைப் பலரும் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் அவ்வாறு கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக நம்பகமான தகவல் ஒன்று எனக்கு கிடைத்தது.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar